"இது தான் வெற்றிகரமான தோல்வி போல..." தொடர்ந்து 4 'மேட்ச்' தோத்தாலும் ஹேப்பி 'அண்ணாச்சி' மோடில் RCB 'ரசிகர்'கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிளே ஆஃப் சுற்றில் முன்னேறுவதற்காக பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியின் தவான் மற்றும் ரஹானே ஆகியோர் சிறப்பாக ஆடினர். தவான் மற்றும் ரஹானே ஆகியோர் அரை சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

டெல்லி அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணி தங்களது பிளே ஆப் சுற்றில் மும்பை அணியை சந்திக்கிறது. பெங்களூர் அணி தோல்வி பெற்றாலும், டெல்லி அணி 18 ஆவது ஓவருக்குள் இலக்கை எட்டாததால் பெங்களூர் அணியும் ரன் ரேட் விகிதத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் கொல்கத்தா அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இறுதி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை மும்பை அணி வீழ்த்தினால் மட்டுமே கொல்கத்தா அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்