'அடுத்த அதிரடிக்கு தயாராகும் டெல்லி அணி'... 'முக்கிய வீரரை கொண்டுவர முயற்சி'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்  நட்சத்திர வீரர் ஒருவரை, தங்களது அணிக்குள் கொண்டு வர டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போதே தீவிர முயற்சியில் களம் இறங்கியுள்ளது.

கடந்த 2008-ல் துவங்கப்பட்ட உள்ளூர் போட்டியான ஐபிஎல், இதுவரை 12 சீசன்கள் இதுவரை முடிந்துள்ளன. ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய 3 அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்நிலையில், அடுத்த சீசனிலாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி, அதற்கான திட்டம் வகுத்து வருகிறது. இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், அந்த அணியின் நட்சத்திர வீரருமான ரகானேவை வாங்குவதில் முனைப்பாக இருக்கிறது.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இரு அணிக்கும் நெருக்கமான ஒருவர் கூறும்போது, ‘ஆம், ரஹானேயை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குள் கொண்டுவர முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த டீல் டெல்லி கேப்பிடல்ஸுக்குச் சாதகமாக அமையுமா என்பது உறுதிப்படத் தெரியவில்லை, ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு நிறைய விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியுள்ளது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அவர் மிகப்பெரிய விளம்பரத்தூதர், ஆனாலும் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன’ என்றார்.

கடந்த 2008, 2009-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களம் இறங்கினார் ரகானே. 2010-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. 2011-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்தார். ராஜஸ்தான் தடை செய்யப்பட்ட போது புனேக்கு சென்றார். இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குள், ரகானேவை கொண்டுவர முயற்சி நடைபெறுகிறது.

IPL, DELHICAPITALS, RAJASTANROYALS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்