ஒட்டுமொத்த 'ஐபிஎல்' 'history'ல... 'டெல்லி' டீம் மட்டும் தான்,,.. 'இப்டி' ஒரு விஷயத்த பண்ணிருக்காங்க!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

நேற்றைய போட்டியுடன் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நான்காவது இடத்தில் கொல்கத்தா அல்லது ஹைதராபாத் அணிகளில் ஒன்று இன்றைய போட்டி முடிவுக்கு பின்னர் தகுதி பெறும்.

இதனிடையே, புள்ளிப் பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை நடைபெற்ற ஒட்டுமொத்த ஐபிஎல் சீசன்களில் புள்ளிப் பட்டியலில் 1 முதல் 10 ஆம் இடம் வரை அனைத்து இடங்களையும் பிடித்துள்ளது. 2009 மற்றும் 2012 ஆண்டுகளில் முதலிடமும், இந்த முறை இரண்டாமிடமும், 2019 ஆம் ஆண்டு மூன்றாம் இடமும், 2008 ஆம் ஆண்டில் நான்காம் இடம், 2010 இல் ஐந்தாம் இடம், 2016, 2017 ஆண்டில் ஆறாம் இடம், 2015 இல் ஏழாம் இடம், 2014, 2018 இல் எட்டாம் இடம், 2013 இல் ஒன்பதாம் இடம் மற்றும் 2011 இல் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த முறை கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் டெல்லி அணி மட்டும் தான் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இப்படி அனைத்து இடங்களையும் பிடித்துள்ள ஒரே அணியாக திகழ்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்