"அத எதுக்கு உருட்டிக்கிட்டு.." 'சிஎஸ்கே'வை கிண்டல் செய்து டெல்லி கேப்பிடல்ஸ் போட்ட ட்வீட்.. இது எல்லாம் நல்லா இல்ல

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள், பெங்களூரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

Advertising
>
Advertising

நாளையும் ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ள நிலையில், பல முக்கிய வீரர்களை இன்று பல அணிகள் சொந்தமாக்கி அசத்தியது.

மேலும், இன்றைய தினத்தில், அதிகபட்ச தொகையாக, இளம் வீரர் இஷான் கிஷானை, 15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.

இஷான் கிஷான்

இதற்கு அடுத்தபடியாக, தீபக் சாஹரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 14 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. இதே போல, பல வீரர்களும் எதிர்பார்த்த தொகையை விட, அதிக தொகைக்கு ஏலம் போயிருந்தனர். முதல் நாள் முடிவில், தங்களது ஃபேவரைட் அணிகள் எடுத்த வீரர்கள் பற்றி, தங்களின் கருத்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை அணி

இது ஒரு பக்கம் இருக்க, சிஎஸ்கே மற்றும் மும்பை உள்ளிட்ட அணிகள், அதிக வீரர்களை இன்றைய நாளில் ஏலத்தில் எடுக்கவில்லை. அது மட்டுமில்லாமல், சிஎஸ்கே அணி, கடந்த சீசனில் ஆடிய பிராவோ, உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர், ஆசிப் உள்ளிட்ட வீரர்களைத் தான், மீண்டும் ஏலத்தில் எடுத்திருந்தது.

ஏலத்திற்கு முன்பாக, சிஎஸ்கே அணி எப்படிப்பட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என ரசிகர்கள் கணித்து வந்தனர். முற்றிலும் புதுமையான அணியாக இருக்கும் என்றும் சிலர் கருதியிருந்தனர். ஆனால், சென்னை அணியோ தங்களுடைய அணியில் ஏற்கனவே ஆடிய வீரர்களை தான் பெருவாரியாக எடுத்திருந்தது.

சென்னை அணியின்  வித்தியாசமான முடிவு குறித்தும், பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சென்னை அணி ஏலத்தில் செயல்பட்டது பற்றி, கிண்டல் செய்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிண்டல் செய்து மீம்

சிஎஸ்கே பழைய வீரர்களையே மீண்டும் எடுத்துள்ளதை குறிப்பிட்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 'எதுவுமே மாறவில்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது' என ஏலத்திற்கு பிறகு, சிஎஸ்கே அணி கருதும் என்பதை ஹிந்தியில் மீம்ஸ் ஒன்றாக, குறிப்பிட்டுள்ளனர்.

ஏலத்தில், சக அணியின் செயல்பாடு குறித்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணி செய்துள்ள ட்வீட், ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. மேலும், சென்னை அணி ரசிகர்களும், தங்களின் அணிக்கு ஆதரவாக சில கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

CHENNAI-SUPER-KINGS, DELHI CAPITALS, IPL AUCTION 2022, MEME, MS DHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்