"தெரியாத்தனமா 'வாய்' விட்டு மாட்டிட்டீங்களே??..." ராஜஸ்தான் அணியை 'பஞ்சர்' பண்ணி அனுப்பிய 'டெல்லி' அணி... வைரலாகும் 'ட்வீட்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டியில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ஜே (Anrich Nortje) ஒட்டுமொத்த ஐபிஎல் தொடர்களிலேயே மிக வேகமான பந்தை வீசிய சாதனையை இவர் பெற்றார். இவர் வீசிய பந்தின் வேகம் 156.22 கி.மீ/மணி நேரம் ஆகும். அது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் மிக வேகமாக வீசப்பட்ட முதல் 5 பந்துகளையும் நேற்று ஒரே போட்டியில் வீசி சாதனை படைத்தார்.

இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றியும் பெற்றிருந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் ஒன்றையும் டெல்லி கேப்பிடல்ஸ் பதிவிட்டுள்ளது. அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த சீஸனின் வேகப்பந்தை ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசியிருந்தார். அப்போது, ராஜஸ்தான் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில், 'ஆர்ச்சரை விட வேகமாக இந்த சீசனில் யார் பந்து வீசுவார்கள் என்பதை தெரிவியுங்கள்' என ஆர்ச்சரின் சாதனையை யாரும் முறியடிக்க முடியாதது போல் பதிவிட்டிருந்தது. 

 

இந்நிலையில், நேற்றைய போட்டியில் அன்ரிச் நார்ஜே, இந்த சீசனில் மட்டுமில்லாது ஒட்டுமொத்த ஐபிஎல் சீசனிலும் சேர்த்து வேகப் பந்து வீசிய பெருமையை அவர் பெற்ற நிலையில், அதனை குறிப்பிட்டு டெல்லி அணி, ராஜஸ்தான் அணியின் டீவீட்டை டேக் செய்து பகிர்ந்துள்ளது.

இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்