VIDEO : "உங்கள தான்யா அதிகமா நம்புனோம்..." 'டெல்லி' அணிக்கு அடுத்தடுத்து நடந்த 'அதிர்ச்சி'... தொடக்கத்திலேயே 'மாஸ்' காட்டும் பஞ்சாப் 'அணி'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

13 ஆவது ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில்  பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது ஷமி வீசிய பந்தை எதிர்கொண்ட ஷிகர் தவான் அடித்த பந்து, கீப்பர் ராகுல் கையில் இருந்து தவறிய நிலையில், அந்த பந்தில் தேவையில்லாமல் ஓட முயற்சி தவான் செய்தார்.

அப்போது, அவர் பஞ்சாப் அணியால் ரன் அவுட் செய்யப்பட்டார். பேட்ஸ்மேன்கள் இடையே நடைபெற்ற தவறால் அவர் அவுட் ஆனார். ஆனால் அதே ஓவரில், டெல்லி அணிக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. தவானுக்கு பின் இறங்கிய ஹெட்மெயர் அடித்த பந்தை கிருஷ்ணப்பா கவுதம் தவறவிட்டார். அதிரடி வீரரான ஹெட்மெயர் பஞ்சாப் அணி தவறவிட்டது, பஞ்சாப் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் நான்காவது ஓவரில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷாவும் ஆட்டமிழந்தார். அத்துடன் மட்டுமில்லாமல், அதிரடி வீரர் ஹெட்மெயருக்கும் இரண்டாவது ஓவரில் கிடைத்த அதிர்ஷ்டம் அதிக நேரம் கை கொடுக்கவில்லை. அவரும் அதே ஓவரில், ஷமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். நான்காவது ஓவரின் முடிவில்  டெல்லி அணி 5 ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.  

 
 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்