IPL 2022 : மீண்டும் வந்த கொரோனா.. "இந்த தடவ ஒரு பிளேயருக்காம்.." அடுத்த போட்டிக்கு சிக்கல்??.. அச்சத்தில் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த சில தினங்களுக்கு முன், டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த பிசியோ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்த நிலையில், தற்போது வெளியான தகவல் ஒன்று, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

15 ஆவது ஐபிஎல் தொடர், தற்போது இந்தியாவில் வைத்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஐந்து வெற்றிகளுடன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு, இந்தியாவில் வைத்து நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து, ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்றிருந்தது. இதனையடுத்து, கொரோனா தொற்று காரணமாக, நடப்பு ஐபிஎல் தொடர், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களில் மட்டும் நடைபெற்று வருகிறது.

டெல்லி அணிக்குள் புகுந்த கொரோனா

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிசியோவான பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் காரணமாக, அவர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ குழு மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் வருகிறார்.

பல்வேறு கட்ட பாதுகாப்புகள் இருந்தும், ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்று பரவியுள்ளது, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனைத் தொடர்ந்து, டெல்லி அணியில் மசாஜ் செய்யும் தெரபிஸ்ட் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

வீரருக்கும் உறுதி?

இந்நிலையில் தான், டெல்லி அணியிலுள்ள வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று பரவல் இருப்பதாக தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீரரின் விவரம் பற்றி தகவல்கள் வெளிவராத நிலையில், அவர் ஒரு வெளிநாட்டு வீரர் என்றும், அவருக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அடுத்த போட்டிக்கு சிக்கல்?

ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் அந்த வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் காரணமாக, டெல்லி அணியிலுள்ள அனைத்து வீரர்களும் மும்பையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐபிஎல் நிர்வாகம், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆர்டி-பிசிஆர் சோதனை மூலம் கொரோனா தொற்றை உறுதிப்படுத்தும். எனவே, டெல்லி அணியிலுள்ள அனைத்து நபர்களுக்கும், இன்றும் நாளையும் ஆர்டி - பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

டெல்லி அணி தங்களின் அடுத்த போட்டியில், பஞ்சாப் அணியை வரும் புதன்கிழமையன்று (20.04.2022), புனே மைதானத்தில் சந்திக்கவுள்ளது. ஆனால், சோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாக, டெல்லி அணி புனே செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முறை, 25 சதவீத ரசிகர்களும் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஐபிஎல் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவல், ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டு பணியுள்ளது.

சோதனை முடிவுகள் வந்த பிறகு தான், அதன் அடிப்படையில் ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

DELHI CAPITALS, RISHABH PANT, IPL 2022, டெல்லி கேப்பிடல்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்