"தோனியோட வெறித்தனமான ரசிகன் நான்.." சிஎஸ்கே டீம்'ல ஆடணும்.." 'குழந்தை' போல ஆசைப்படும் இளம் வீரர்.. தட்டித் தூக்குமா சென்னை?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், சிஎஸ்கே அணிக்காக ஆட வேண்டும் என இளம் வீரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
15 ஆவது ஐபிஎல் தொடர், இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில், இந்தியாவில் வைத்து நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த முறை அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் இணைந்துள்ளதால், மொத்தம் 10 அணிகள், ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளது.
தீவிரமாக இறங்கிய ஐபிஎல் அணிகள்
இதன் காரணமாக, இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக, ஐபிஎல் மெகா ஏலமும், வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்கும், 590 வீரர்கள் அடங்கிய இறுதி பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. மெகா ஏலத்தின் மூலம், இந்த பட்டியலில் இருந்து சிறந்த வீரர்களை தேர்வு செய்வதற்கான முன்னேற்பாடுகளில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக இறங்கியுள்ளது.
சிஎஸ்கே அணி
அதே போல, அதிக இளம் வீரர்கள் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களை வைத்து வருங்கால அணியை சீர் செய்யும் முயற்சியிலும், ஐபிஎல் அணிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் ஆட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போதைய ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான தீபக் ஹுடாவிற்கு, அடிப்படை தொகையாக 75 லட்ச ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா
கடந்த ஆண்டு, ஐபிஎல் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தீபக் ஹூடா ஆடியிருந்தார். அதிரடி பேட்டிங் மற்றும் ஆப் ஸ்பின் பவுலிங் என ஒரு சிறந்த இந்திய ஆல் ரவுண்டர் தீபக் ஹுடாவுக்காக, நிச்சயம் சில அணிகள் போட்டி போடும் என்றே தெரிகிறது. அது மட்டுமில்லாமல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் அணியிலும், தீபக் ஹூடா தேர்வாகியுள்ளார்.
ஒரு குழந்தை நான்
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆட விருப்பம் தெரிவித்தது பற்றி பேசிய தீபக் ஹூடா, 'சிஎஸ்கே அணியில் ஆடுவதைப் போல எதுவுமே இருக்கப் போவதில்லை. என்னுடைய சிறந்த ஐபிஎல் அணி என்றால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். தோனியின் தலைமையின் கீழ் ஆட விரும்பும் ஒரு குழந்தையைப் போன்றவன் நான்.
தோனியின் ரசிகன்
அதே போல, நான் ஒரு வெறித்தனமான தோனி ரசிகனும் கூட. அவருடைய தலைமை பண்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நான் நிறைய முறை பேசியிருக்கிறேன். நான் முன்பு இந்திய அணிக்காக வந்த போது, தோனியும் இருந்தார். அவருடன் அப்போதும் அதிகம் உரையாடியுள்ளேன். அதன் பிறகு, அவரை எப்போது சந்தித்தாலும் பேசிக் கொண்டே தான் இருப்பேன்' என தீபக் ஹூடா தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே எடுக்க போகும் முடிவு
தீபக் ஹூடாவைப் போல, பல இந்திய இளம் வீரர்களும் , தோனி தலைமையின் கீழ் ஆட விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதில் யார் எல்லாம், தங்களின் கனவு மெய்ப்பட்டு, சிஎஸ்கே அணிக்காக ஆடப் போகிறார்கள் என்பதை, ஏலத்தில், சிஎஸ்கே அணி எடுக்கும் முடிவை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் மெகா ஏலம் : 'சிஎஸ்கே' பிளேயருக்கு செம டிமாண்ட் இருக்க போகுது.. 11 கோடி வர விலை போவாரு.. முன்னாள் வீரர் கருத்து
- தினேஷ் கார்த்திக்கின் 14 வருட ஆசை நிறைவேறுமா?.. ‘தல’ தோனியின் கையில் இருக்கும் அந்த முடிவு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- தோனி மாதிரி பெரிய ஃபினிஷரா வரணும்.. ஆசைப்படும் 'தமிழக' இளம் வீரர்.. ஆஹா, 'சிஎஸ்கே' ஏலத்துல தூக்குனா செமயா இருக்குமே
- காத்தோட உன் வாசம்.. ஊரெல்லாம் உன் பாசம்.. கண்ணே நீ திரும்பி வரணும் எங்களுக்கு.. கிறிஸ் கெய்லுக்கு ஆசைப்பட்ட 2 அணிகள்!
- IPL Auction 2022: இவங்க 10 பேரை எடுக்க தான் கடும் போட்டி நடக்கபோகுது பாருங்க.. லிஸ்ட்டை வெளியிட்ட பிசிசிஐ..!
- இத்தன நாளா சைலண்டா இருந்தது இதுக்குதானா.. பாண்ட்யா போட்ட ‘மெகா’ ப்ளான்.. இதை நாங்க எதிர்பார்க்கலயே..!
- யாரும் எதிர்பார்க்காத தோனியின் 'Entry'?.. 'Waiting'லேயே வெறி ஏறுதே.. 'CSK' ரசிகர்களுக்கு காத்திருக்கும் வேற மாறி 'சர்ப்ரைஸ்'
- 'நான் கேப்டன் ஆகாம போனதன் பின்னணியே இதான்'.. ஹர்பஜன் சிங்.. BCCI சீக்ரெட்ஸையே மொத்தமாக உடைச்சுட்டாரே மனுஷன்!
- இனிமே அந்த ‘சீனியர்’ பவுலர் வேணாம்.. அதுக்கு பதிலா நம்ம ‘சிஎஸ்கே’ தங்கத்த கொண்டு வாங்க.. கடுப்பான கவாஸ்கர்..!
- நீங்க வேணா பாருங்க.. அந்த ‘சிஎஸ்கே’ ப்ளேயரை எடுக்க போட்டி போட போறாங்க.. செம டிமாண்ட் இவருக்கு.. ஆகாஷ் சோப்ரா ‘சூப்பர்’ கணிப்பு..!