இன்னும் பந்தே வீசல.. அதுக்குள்ள அவசரம்.. பேட்ஸ்மேன் ஒரு செகண்ட் ஷாக் ஆகிட்டாரு.. தீபக் சஹார் செய்த சம்பவம்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தீபக் சஹார் பேட்ஸ்மேனுக்கு மன்கட் எச்சரிக்கை விடுத்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறது இந்திய கிரிக்கெட் அணி. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இன்று மூன்றாவது போட்டி ஹராரேயில் நடைபெற்றது. பிற்பகல் 12: 45 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
வெற்றி
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் கே.எல் ராகுல் களம் இறங்கினர். நிதானமாக ஆடிய இந்த ஜோடி 63 ரன்களை குவித்தது. அதன்பிறகு வந்த இஷான் கிஷன் (51) அரைசதமும், ஷுப்மன் கில் (130) சதமும் விளாசினர். இதன் பலனாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 289 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி சேஸிங்கை துவங்கியது.
ஆரம்பம் முதலே இந்திய அணி பவுலர்களை சமாளிக்க முடியாமல் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் திணறிவந்தனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் அந்த இழந்தது ஜிம்பாப்வே அணி. அதிகபட்சமாக அந்த அணியின் சிக்கந்தர் ராஸா மட்டும் 115 ரன்கள் எடுத்தார்.
மன்கட்
பந்துவீச்சாளர் பந்தை வீசுவதற்கு முன்னரே நான் ஸ்ட்ரைக் எண்டில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு நகர்கையில் பவுலர் அவரை ரன் அவுட் செய்வதே மன்கட் எனப்படுகிறது. இது பெரும் சர்ச்சைகளை கிளப்பும் செயல் என்றாலும், இந்த விதிமுறை செல்லும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் கையாவிற்கு முதல் ஓவரின் முதல் பந்திலேயே மன்கட் எச்சரிக்கை விடுத்தார் தீபக் சாஹர். முதல் ஓவரின் முதல் பந்தை வீச ஓடிவந்த தீபக் சாஹர், பவுலிங் முனையில் நின்ற கையா க்ரீஸை விட்டு நகர்ந்ததை கண்டு பந்துவீசாமல் நின்று மன்கட் எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் அவரது கை பட்டு பெயில்ஸ் கீழே விழுந்தது. ஆனாலும் அப்பீல் கேட்காமல் மீண்டும் பந்துவீச திரும்பினார் சஹார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "35 வருஷத்துக்கு முன்னாடி இதே கிரவுண்ட்ல இருந்து அழுதுகிட்டே வெளியே வந்தேன்".. சச்சின் பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ..
- பழுதான விமான எஞ்சின்.. வேற வழியில்லாம சாலையில் தரையிறக்குன விமானிகள்.. திக்.. திக் வீடியோ..!
- உயிரைவிட அந்த Bag முக்கியமா?.. ரயில் வர்றப்போ குறுக்கே பாய்ந்த பெண்.. திக்..திக்.. வீடியோ..!
- யம்மாடி.. எவ்வளவு பெருசு... ஷூ-க்குள்ள இருந்ததை பார்த்து மிரண்டு போன நபர்.. IFS அதிகாரி பகிர்ந்த திக்..திக்.. வீடியோ..!
- ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடிய தமிழக கோவில் யானை 'அகிலா'.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த கியூட் வீடியோ..
- பந்து பேட்லயே படல.. ஆனாலும் 3 ரன் ஓடிய பேட்ஸ்மேன்கள்.. மாத்தி மாத்தி பந்தை கோட்டைவிட்ட ஃபீல்டர்ஸ்.. வைரலாகும் வீடியோ..!
- "என் குழந்தைக்கு வைத்தியம் பாருங்க".. குட்டியுடன் கிளீனிக்குக்கு வந்த குரங்கு.. டாக்டர் காட்டிய பாசம்..நெகிழ வைக்கும் வீடியோ..!
- புதுசா கட்டுன பாலத்தை திறக்க போன மேயர்.. சடார்னு முறிஞ்சு விழுந்த புதுப்பாலம்..வைரல் வீடியோ..!
- ஆத்தாடி எம்மாம்பெருசு.. வலையில் சிக்கிய 100 வயதான ராட்சத லாப்ஸ்டர்..வைரலாகும் வீடியோ..!
- 50 வருடம் ஒரே பள்ளியில் பணியாற்றிய டீச்சர்.. Retire-ஆன நாள்ல மாணவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரலாகும் வீடியோ..!