"'Retired' ஆன அன்னைக்கி தோனி சொன்ன விஷயம்.." 'சிஎஸ்கே' வீரர் வெற்றிக்கு பின்னால் இருக்கும் 'சீக்ரெட்'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசியதன் மூலம், இந்திய அணியிலும் இடம் பிடித்தவர் தீபக் சாஹர்.

Advertising
>
Advertising

ஆரம்ப ஓவர்களில், தன்னுடைய ஸ்விங் பந்து வீச்சு மூலம், எதிரணியினரின் முக்கிய விக்கெட்டுகளை குறி வைத்து தூக்குவதில் தீபக் சாஹர் வல்லவர்.

தொடக்கத்தில், பந்து வீச்சாளராக வலம் வந்த இவர், மெல்ல மெல்ல பேட்டிங்கிலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தீபக் சாஹர்

சிஎஸ்கே அணிக்காகவும் நிறைய போட்டிகளில், கடைசி கட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தியுள்ளார். அதே போல, சர்வதேச போட்டிகளிலும் சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில், அதிரடி காட்டி, கிரிக்கெட் உலகில் பலரை தன் பக்கம் திரும்ப வைத்திருந்தார் தீபக் சாஹர்.

14 கோடி ரூபாய்க்கு ஏலம்

கடந்த ஐபிஎல் சீசனில், சிஎஸ்கே அணியில் இடம் பிடித்திருந்த தீபக் சாஹரை, அந்த அணி நீக்கியிருந்தது. அதன் பிறகு, பவுலிங் மட்டுமில்லாமல், பேட்டிங்கிலும் கலக்கி வரும் தீபக் சாஹரை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில், சென்னை அணி 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

தோனி பகிர்ந்த விஷயம்

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 போட்டியின் போது, தீபக்கிற்கு காயம் அடைந்ததால்,  இலங்கை தொடரில் அவர் கலந்து கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தோனி ஓய்வை அறிவித்த தினத்தன்று தன்னிடம் கூறிய ஒரு விஷயம் பற்றி, தீபக் சாஹர் தற்போது மனம் திறந்துள்ளார்.

பேட்டிங்கில் கவனம்

'ஒரு நாள் தோனி பாய் என்னிடம், "நீ பந்து வீச்சில் நல்ல வேலையை செய்து வருகிறாய். ஆனால், உன்னுடைய பேட்டிங்கில் நீ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நீ அதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என நான் நினைக்கிறன்" என கூறினார். தனது ஓய்வினை அறிவித்த தினத்தன்று, மாலை என்னிடம் இதனை தோனி தெரிவித்தார். பேட்டிங்கில் அதிக கவனம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்' என தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

தோனியின் பங்கு

தீபக் சாஹரை ஆரம்ப ஓவர்களில், ஸ்விங் செய்ய வைத்து விக்கெட் எடுக்க வைக்கும் பந்து வீச்சாளராக மாற்றியதில், தோனியின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஐபிஎல் தொடரை போலவே, சர்வதேச போட்டிகளிலும், ஆரம்பத்தில் சில முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வரும் தீபக் சாஹர், இன்று நல்ல ஒரு பேட்ஸ்மேனாக மாறி வருவதிலும், தோனியின் ஆலோசனை முக்கிய பங்கு வகித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

MSDHONI, DEEPAK CHAHAR, CSK, IND VS WI, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்