ஏக்கத்தில் இருந்த CSK ரசிகர்கள்.. அசத்தலாக வந்து சேர்ந்த குட் நியூஸ்.. "இன்னும் Fast'அ நடந்தா செமயா இருக்கும்'ல.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று, 15 ஆவது ஐபிஎல் சீசன் ஆரம்பமாகி இருந்தது.

Advertising
>
Advertising

இதன் அறிமுக போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு போட்டிகளும் சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று (02.04.2022) நடந்து முடிந்த முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தி இருந்தது.

அடுத்தடுத்து தோல்வி

தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இதனிடையே, ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை அணி, அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டியில், சென்னை அணி தோல்வி அடைந்துள்ளதால், அந்த அணியின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

எந்த ஐபிஎல் தொடரிலும், முதல் இரண்டு போட்டிகளில், சென்னை அணி தோல்வி அடைந்ததே இல்லை. ஆனால், இந்த முறை அப்படி நிகழ்ந்துள்ளது. முன்னதாக, ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன், சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிக் கொண்டார். தொடர்ந்து, சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார்.

பந்து வீச்சில் சொதப்பல்

கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில், 131 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்திருந்தது. ஆனால், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், 210 ரன்களை சென்னை அணி எடுத்திருந்தும், பந்து வீச்சில் சொதப்பியதால் தோல்வி அடைய நேரிட்டது. ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன் உள்ளிட்டோர், காயத்தால் அவதிப்பட்டு வருவதால், அனுபவம்  இல்லாத பந்து வீச்சாளர்களை இரண்டாவது போட்டியில் சென்னை அணி களமிறக்கி இருந்தது.

களமிறங்காத தீபக் சாஹர்

இது ஒரு புறம் இருக்க, மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி வாங்கிய தீபக் சாஹர், காயம் ஏற்பட்டு, ஐபிஎல் தொடரில் களமிறங்காமல் இருப்பது, பெரிய தலைவலியாகவும் இருந்தது. இதனால், சென்னை அணி எப்படி இந்த முறை போட்டிக்கு தயாராகும் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்து வந்தது.

அசத்தல் அப்டேட்

இந்நிலையில், தீபக் சாஹர் சென்னை அணிக்கு திரும்புவது பற்றி அசத்தல் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. பெங்களூரில் உள்ள தேசிய அகாடமியில் இருக்கும் தீபக் சாஹர், காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன், அவர் பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களும் அதிகம் வைரலாகி இருந்தது.

மேலும், அடுத்த இரு வாரங்களில், அங்கிருந்து கிளம்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தற்போதைய நிலை, இப்படியே தொடரும் பட்சத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி வாக்கில், சென்னை அணியில், தீபக் சாஹர் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

அதற்கு முன்பாக, நாளைய (03.04.2022) போட்டியுடன் சேர்த்து, மொத்தம் ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே ஆடவுள்ளது. இதனால், தகுந்த திட்டங்கள் வகுத்து, அதற்கேற்ப செயல்பட்டால் மட்டுமே, அடுத்தடுத்த போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, CSK, CHENNAI-SUPER-KINGS, DEEPAK CHAHAR, IPL 2022, தீபக் சாஹர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்