VIDEO: பால் மறுபடியும் அப்படி வரும்ன்னு நெனச்சீங்களா.. செம ‘ட்விஸ்ட்’ வச்ச சஹார்.. சைலண்டா நடையை கட்டிய இலங்கை வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தீபக் சஹார் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (20.07.2021) கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் மினோட் பானுகா ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பமே இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 77 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது.

அப்போது சஹால் வீசிய 14-வது ஓவரில் மினோட் பானுகா (36 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனை அடுத்து புவனேஷ்வர் குமார் வீசிய 14 ஓவரில் அவிஷ்கா பெர்னாண்டோவும் (50 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பானுகா ராஜபக்சே டக் அவுட்டாகி வெளியேறினார்.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வா மற்றும் அலசங்கா கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஸ்கோரை மெதுவாக உயர்த்தியது. இதனால் இந்த ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் முயற்சி செய்தனர். அப்போது கேப்டன் ஷிகர் தவான், தீபக் சஹாரை பந்துவீச அழைத்தார். அவர் வீசிய 27-வது ஓவரின் முதல் பந்தை தனஞ்சய டி சில்வா எதிர்கொண்டார். அந்த பாலில் 2 ரன்கள் சென்றது. அதனால் தீபக் சஹார் மீண்டும் அதேபோல் வீசுவார் என எண்ணி சில்வா பெரிய சாட் அடிக்க முயன்றார்.

ஆனால் தீபக் சஹார் அதை நக்குல் பாலாக (Knuckleball) வீச, அது ஷிகர் தவனிடம் கேட்சானது. அதேபோல் ஹசரங்காவையும் நக்குல் பால் வீசி தீபக் சஹார் போல்டாக்கினார். இதனை அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

அப்போது 8-வது வீரராக களமிறங்கிய கருணாரத்னே 44 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 275 ரன்களை இலங்கை அணி எடுத்தது. இதில் அதிகபட்சமாக அலசங்கா 65 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்