‘அந்த ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு வாய்ப்பு இருக்கு’!.. இலங்கை தொடருக்கு புதிய கேப்டனா..? எதிர்பார்ப்பை எகிற வைத்த முன்னாள் வீரரின் பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு வீரர்கள் கேப்டனாக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் அனைவரும் தங்களது வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய இரு அணிகள் மோதுகின்றன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இதில் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரஹானே, ரோஹித் ஷர்மா, ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியே அடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். இந்த தொடருக்கு முற்றிலும் புதிதாக ஒரு அணியை அனுப்ப உள்ளதாக அவர் தெரிவித்தார். விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரஹானே போன்ற முன்னணி வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து தொடரில் விளையாட உள்ளதால், இலங்கைக்கு எதிரான தொடரை யார் கேப்டனாக வழி நடத்த உள்ளார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா (Deep Dasgupta) இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து Sports Today சேனலில் பேசிய அவர், ‘விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் இந்த தொடரில் விளையாடவில்லை என்பது தெரிந்த விஷயம்தான். அதனால் அணியில் மூத்த வீரராக உள்ள ஷிகர் தவான் இலங்கை தொடருக்கு கேப்டனாக வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன். அதேவேளையில் புவனேஷ்வர்குமாரும் ஒரு சிறந்த கேப்டனாக செயல்படுவார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புவனேஷ்வர்குமார் பெயர் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து மைதானங்கள் ஸ்விங் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால், புவனேஷ்வர்குமாரை அணியில் எடுத்திருந்தால், கூடுதல் பலமாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான தொடரில் புவனேஷ்வர்குமார் கேப்டனாக செயல்படுவாரா? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்