கடைசி வரை அந்த மனுசனை அவுட்டாக்க முடியல.. இந்தியாவின் வெற்றியை தடுத்த ‘தனி ஒருவன்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தங்களது முதல் இன்னிங்ஸில் 145 ரன்கள் எடுத்தது. அதேபோல் நியூசிலாந்து அணியும் தங்களது முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 284 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. ஆனால் கடைசி ஒரு விக்கெட்டை மட்டும் இந்திய அணியால் வீழ்த்த முடியவில்லை. அதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இப்போட்டி டிராவில் முடிவடைந்ததற்கு நியூசிலாந்து அணியின் அறிமுக வீரர் சச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) முக்கிய காரணமாக இருந்தார். 7-வது வீரராக களமிறங்கிய இவர் 91 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து. எவ்வளவு முயன்றும் இவரது விக்கெட்டை இந்திய அணியால் வீழ்த்த முடியவில்லை. அதேபோல் மறுமுனையில் அஜாஸ் படேலும் சிறப்பாக விளையாடி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதனால் நியூசிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘எப்பா என்னா பவுலிங்’!.. இந்த மாதிரி ‘மேஜிக்’ எல்லாம் ஜடேஜாவால தான் செய்ய முடியும்..!
- VIDEO: திடீரென அம்பயருடன் ‘கடும்’ வாக்குவாதம் செய்த அஸ்வின்.. பதறிப்போய் வேகமாக ஓடி வந்த ரஹானே.. என்ன நடந்தது..?
- VIDEO: அவுட்டான கடுப்பில் ஜடேஜா செய்த செயல்.. சொந்த மண்ணில் தடுமாறும் இந்தியா..!
- கோப்பையை என் கையில் கொடுத்துட்டு ‘ரோஹித்’ சொன்ன விஷயம் இதுதான்.. இளம் வீரர் நெகிழ்ச்சி..!
- ‘வெறித்தனம்’.. முதல் போட்டியே இப்படியொரு சாதனையா..! மாஸ் காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்..!
- அசத்தும் ஸ்ரேயாஸ் ஐயர்.. மிரள வைக்கும் ‘பழைய’ ரெக்கார்டுகள்.. நீங்களே பாருங்க..!
- VIDEO: ‘இதெல்லாம் ரொம்ப ரேர் தான்’!.. பிசிசிஐ வெளியிட்ட ‘சூப்பர்’ வீடியோ..!
- இந்திய அணியில் களம் இறங்க போகும் ‘தமிழர்’.. உறுதி செய்த ரஹானே.. டெஸ்டில் நடக்க போகும் மாற்றங்கள்..!
- “இங்க அதெல்லாம் எடுபடாது”.. புது ப்ளானுடன் களமிறங்கும் நியூஸிலாந்து.. கோச் சொன்ன சீக்ரெட்..!
- ‘என்ன இப்படி கேட்டீங்க’.. நிருபர் எழுப்பிய கேள்வியால் ‘கடுப்பான’ புஜாரா.. அப்புறம் ‘கூலாக’ சொன்ன பதில்..!