'இதுக்கு ஒரு முடிவே இல்லையா'? ...'திரும்பவும் வந்தாச்சு சிக்கல்' ... 'தல'யா? ... 'ராகுலா'?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில்,தோனியும் ராகுலும் சிறப்பாக விளையாடிய நிலையில்,4வது இடத்தில் யாரை இறக்குவது என்பது குறித்து மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலகக்கோப்பை போட்டிகளுக்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. உலகக்கோப்பை போட்டிகள் நாளை தொடங்க இருக்கும் நிலையில்,இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆடி வந்தது.முதலில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூஸிலாந்து அணியினை எதிர் கொண்டது.இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது.இதனிடையே நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்களாதேஷ் அணியினை எதிர்கொண்டது.இந்த போட்டியில் இந்திய அணி அபாரமான வெற்றியினை பெற்றது.

இதனிடையே உலகக்கோப்பை போட்டியில் 4வது இடத்தில யாரை களமிறக்குவது என்பது குறித்து மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 4வது இடத்தில் களமிறங்கிய ராகுல் ரன் எதுவும் அடிக்காமல் சொதப்பினார்.ஆனால் 6வது இடத்தில களமிறங்கிய தோனி 17 ரன்களில் அவுட் ஆகினாலும்,42 பந்துகளை எதிர்கொண்டிருந்தார்.இதனால் 4வது இடத்தை ஏன் தோனிக்கு கொடுக்க கூடாது என்ற கேள்வி எழுந்தது.

இருப்பினும் அன்றைய போட்டியில் கேதர் ஜாதவ் விளையாடாத காரணத்தால், நேற்றைய போட்டியில் அவர் களமிறக்கப்பட்டு சோதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டியிலும் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் நேற்றைய போட்டியில் மீண்டும் 4வது இடத்தில் களமிறங்கிய ராகுல் அதிரடியாக விளையாடி 99 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார்.அதே நேரம் 6ஆம் இடத்தில் இறங்கிய தோனி,78 பந்துகளில் 113 ரன்களை விளாசி தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்தார்.இதனால் மீண்டும் 4வது இடத்திற்கான சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பலரும்,அனுபவமும்,ஆட்டத்தின் சூழ்நிலை உணர்ந்து ஆடும் தோனியே 4வது இடத்திற்கு சரியாக இருப்பார் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.அதே நேரம் 4வது இடம் என்பது ஆட்டத்தின் போக்கினை எந்த விதத்திலும் தீர்மானிக்கலாம் என்பதால்,அதற்கு இளம் வீரர்கள் தான் சரியாக இருப்பார்கள் என,மற்றோரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்