'சாப்பாடு' நல்லா இல்லையா?.. இல்லப்பா 'டீ' நல்லா இல்ல.. அதான் 'டக் அவுட்' ஆகிட்டாரு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி முதல் ரெண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது. தற்போது 3-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

3-வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர், ''இந்திய சுற்றுப்பயணம் என்பது மிக சவாலானது. ஒரு மனிதராகவும் கிரிக்கெட்டராகவும் கடினமாக இருந்தது. இந்தியா போன்ற சிறிய இடங்களுக்கு வரும்போது ஓட்டல்கள் சரியாக இருக்காது. உணவும் நல்ல உணவும் வழங்கப்படவில்லை. இந்தியாவுக்கு வருவதே ஒரு பாடம்,'' என விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு இந்திய ரசிகர்கள் கடுமையாக பதிலடி கொடுத்தனர். இந்தநிலையில் 3-வது டெஸ்ட் போட்டியில் எல்கர் 2 பந்துகளை சந்தித்து டக்-அவுட் ஆகிவிட்டார். நெட்டிசன்களுக்கு கேட்கவா வேண்டும்? எல்கரின் கமெண்டை வைத்தே அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

நெட்டிசன் ஒருவர்,''பிசிசிஐ சாமர்த்தியமாகச் செயல்பட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியில் எல்கர் சதமடித்ததால் அவருக்கு மோசமான உணவை அளித்து எளிதில் வெளியேற்றி விட்டது,'' என பதிவிட்டார். மற்றொருவர், '' எல்கர் ஏன் விரைவாக வெளியேறினார் தெரியுமா?? டீ பிரேக்கில் நல்ல டீ எல்கருக்கு வழங்கப்படவில்லை. அதனால் அதுகுறித்து புகார் அளிக்கவே எல்கர் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார்,'' என பங்கமாக கலாய்த்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்