'நாங்க 2 பேரும் சேர்ந்து பேட்டிங் பண்றப்போ...' மேக்ஸ்வெல் 'அந்த விசயத்த' அடிக்கடி சொல்லிட்டே இருப்பார்...' - மனம் திறந்த டிவில்லியர்ஸ்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த வருடத்திற்கான ஐபிஎல் சீசன் துவங்கி விறுவிறுப்பாக லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

நேற்று (25-04-2021) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்களை அடித்து துவைத்தனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 33 ரன்கள், டுபலஸிஸ் 50 ரன்கள், சுரேஷ் ரெய்னா 24 ரன்கள், அம்பதி ராயுடு 14 ரன்கள், ஜடேஜா கடைசி ஓவரில் பட்டைய கிளப்பினார். ஒரே ஓவரில் 5 சிக்ஸ் அடித்து 37 ரன்கள் உட்பட மொத்தம் 62 ரன்களை குவித்தார். பின்பு 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று சற்று கடின இலக்கோடு களமிறங்கிய ஆர்.சி.பி அணி தொடர்ச்சியாக விழுந்த விக்கெட்டுகளால்  தோல்வியை தழிவியது.

ஆர்.சி.பி பவர் ப்ளேயில் ஓரளவு அடித்து ரன்களை குவித்தனர், ஆனால் அதன்பின்னர் தொடர்ந்து விக்கெட் இழந்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 122 ரன்களை மட்டுமே அடித்துள்ளது. அதனால் ஆர்.சி.பி அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதுவரை முதல் இடத்தில இருந்த பெங்களுரு அணியை வீழ்த்தி சென்னை அணி முதலிடம் பிடித்தது.

போட்டி முடிந்தபிறகு பெங்களூர் அணியின் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ் அளித்த பேட்டியில், நாங்கள் எங்களது முழு உழைப்பையும் செலுத்தி விளையாடினோம். அதன்காரணமாக இதுவரை நடந்த 5 போட்டியில் 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே. நானும் மேக்ஸ்வெல்  இணைந்து பேட்டிங் செய்கிற பொழுதெல்லாம் அவர் என்னிடம் ஒரு விஷயத்தை சொல்லிகிட்டே இருப்பார்.

அது என்னவென்றால், ரன்களை ஓடி எடுக்க வேண்டாம். பவுண்டரி மட்டும் அடிக்க முயற்சி செய்யலாம் என்று கூறுவார் என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுவரை 5 போட்டியில் 129 ரன்களை அடித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்