திரும்ப வருவாரா ஏபிடி...? 'ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்த அந்த கேள்வி...' - வெளியான லேட்டஸ்ட் தகவல்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2018-ம் ஆண்டு மே மாதம் 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார். 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின்பு, ஐபிஎல் உள்ளிட்ட டி-20 ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வரும் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கும் முயற்சிகள்  தொடர்ந்து நடந்தன.

2019-ம் ஆண்டில் உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இணைந்து விளையாடுவதற்கு டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்தார். எனினும் அவருடைய விருப்பத்தை அந்த அணியின் தேர்வுக்குழு நிராகரித்தது. 10 நாடுகள் பங்கேற்ற அப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஏழாவது இடத்தை பிடித்தது.

சென்ற வருட ஐபிஎல்  போட்டிகளில் அதிரடியாக விளையாடி 454 ரன்கள் அடித்து குவித்தார் டி வில்லியர்ஸ். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 7 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 207 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 164.28 ஆகும்.

இந்த நிலையில் ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற டி வில்லியர்ஸ் மறுத்துள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அணியில் மீண்டும் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு முடிவு கிடைத்துள்ளது.

அதிரடி ஆட்டக்காரரான டி வில்லியர்ஸ்-க்கு தென் ஆப்பிரிக்கா மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். அணிக்கு திரும்பி விளையாடுவாரா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

அடுத்ததாக மேற்கிந்தியத் தீவில் விளையாட இருக்கும் டி-20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்