என்னது இவர் இப்படி பண்ணாரா.. நம்பவே முடியலையே..! தடாலடியாக ப்ளேயிங் 11-ல் இருந்து நீக்கிய தென் ஆப்பிரிக்கா.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் செய்த செயல் உலகளவில் கண்டனங்களை பெற்று வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 18-வது லீக் போட்டி இன்று (26.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக எவின் லூயிஸ் 56 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை டுவைன் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளும், கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளும், அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த நிலையில், இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் டி காக் செய்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை போலீஸ் அதிகாரி ஒருவர் கால் முட்டியால் அவரது கழுத்தில் அழுத்தி கொலை செய்தார். இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனால் கால்பந்து, கிரிக்கெட் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின்போது இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கறுப்பினத்தவர் மீது நடக்கும் வன்முறையை கண்டித்து Black Lives Matter (BLM) என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது, இந்திய வீரர்கள் அனைவரும் மைதானத்துக்கு வெளியே முட்டியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியின்போது தென் ஆப்பிரிக்க வீரர்களும் முட்டியிட்டனர். அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் (Quinton de Kock) மட்டும் முட்டியிட மறுத்து நின்றுகொண்டிருந்தார். இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்றைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் ப்ளேயிங் லெவனில் இருந்து டி காக்கை தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் நிக்கியுள்ளது. இதனை அடுத்து அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ஹென்ட்ரிக் கிளாஸின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டியில் பங்கேற்க முடியாது என்று டி காக் தெரிவித்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்படி முட்டாள்தனமா கேள்வி கேட்கும்போது அமைதியா இருக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம்’!.. தமிழக வீரரின் ‘வேறலெவல்’ ட்வீட்..!
- ‘ஆன்லைன் கும்பலை விட இந்தியா மேல அவருக்கு ரொம்பவே அக்கறை இருக்கு’.. வெளுத்து வாங்கிய சேவாக்..!
- VIDEO: ‘பல வருச வலி’!.. பாகிஸ்தான் ஜெயிச்சதும் ‘கண்ணீர்’ விட்டு அழுத நபர்.. யார் இவர்..?
- VIDEO: ‘இப்படி ஒரு நாள் நிச்சயம் நடக்கும்’!.. 5 வருசத்துக்கு முன்னாடியே கணித்த தோனி.. திடீரென வைரலாகும் ‘பழைய’ வீடியோ..!
- ‘இந்த நாளை என்னைக்கும் மறக்க மாட்டேன்’!.. பாகிஸ்தான் வீரரின் ‘Fan boy’ மொமண்ட்.. தோனிக்கு நேராக நிற்கிற வீரர் யாருன்னு தெரியுதா..?
- போட்டி ஆரம்பிக்கும் முன் இந்திய வீரர்கள் ஏன் இப்படி பண்ணாங்க தெரியுமா..? வெளியான ‘சுவாரஸ்யமான’ தகவல்..!
- ‘அப்பவே தெளிவா சொல்லிட்டேன்’!.. மறுபடியும், மறுபடியும் கேட்டா என்ன அர்த்தம்.. நிருபர் கேட்ட கேள்வி.. செம ‘கடுப்பான’ கோலி..!
- இது ஒன்னும் ஓவர் நைட்ல நடந்திடல.. என்ன ஆனாலும் சரி அவரை டீம்ல இருந்து தூக்கவே மாட்டோம்.. கேப்டன் ‘கோலி’ அதிரடி..!
- கிளம்பும் முன் வீரர்களுடன் மீட்டிங்..! இந்தியாவுக்கு எதிராக நீங்க இப்படிதான் விளையாடனும்’.. பாகிஸ்தான் பிரதமர் சொன்ன வார்த்தை..!
- VIDEO: இப்படி அவுட் ஆவோம்னு கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாரு.. பாவங்க மனுசன்.. ‘செம’ வைரல்..!