'இந்தியா- பாகிஸ்தான் போட்டிய நாங்க வேணும்னா நடத்தி தர்றோமே..!’- முன்வரும் வெளிநாட்டு கிரிக்கெட் கவுன்சில்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச அளவில் பெரிய அணிகளுக்கு இடையேயான பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து நடத்திக் கொடுத்து வருகிறது துபாய் கிரிக்கெட் கவுன்சில். பல சர்வதேச கிரிக்கெட் நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்து வந்த துபாய் கிரிக்கெட் கவுன்சில் தற்போது இந்தியா- பாகிஸ்தான் போட்டியை நடத்தித் தருவதாக முன் வந்துள்ளது.

Advertising
>
Advertising

பிஎஸ்எல் 2021, ஐபிஎல் 2021 மற்றும் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 ஆகிய சர்வதேச போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்துள்ளது துபாய் கிரிக்கெட் கவுன்சில். துபாய் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் அப்துல் ரஹ்மான் ஃபலக்னாஸ் தொடர்ந்து வரும் காலங்களிலும் ஐபிஎல் போட்டிகளை துபாயிலேயே நடத்தும்மாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதுபோக, இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியையும் நடத்தித் தருவதாகக் கூறியுள்ளார்.

வருகிற 2025-ம் ஆண்டு சாம்பியன்ஷிப் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் நடத்தும் என சமீபத்தில் ஐசிசி அட்டவணை ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதன் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது குறித்த விவாதங்கள் எழுந்தன. மத்திய அமைச்சகம் கூட அந்த நேரத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தது.

இந்த சூழலில் இரு நாட்டு கிரிக்கெட் அணி வீரர்களும் அரசியல் காரணங்களால் பயம் இல்லாமல் பாதுகாப்பாக விளையாட துபாய் ஏற்றது என்றும் துபாய் கிரிக்கெட் கவுன்சில் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைவர் அப்துல் ரஹ்மான் ஃபலக்னாஸ் கூறுகையில், “இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை துபாயில் நடத்துவது தான் மிகவும் சரியானதாக இருக்கும்.

முன்னர் இந்தியா- பாகிஸ்தான் போட்டிகளை ஷார்ஜா நடத்திய போது அது போர் போன்று இருக்கும். அதாவது நல்ல விளையாட்டு போர். இந்தியா கிரிக்கெட் அணி வீரர்களை இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு 1 அல்லது 2 முறை பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் வந்து விளையாடச் சொல்லலாம் என்று இருக்கிறேன். இது மிகவும் அருமையாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

CRICKET, INDIA-PAKISTAN MATCH, DUBAI, BCCI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்