‘என்ன இப்படியெல்லாம் அடிக்குறாரு’.. ஒரே ஷாட்டில் SRH-ஐ மிரள வைத்த டேவிட் வார்னர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அடித்த பவுண்டரி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Advertising
>
Advertising

Also Read | ‘அப்போ சொன்னது எல்லாமே பொய்யா..!’ வருங்கால கணவரை அதிரடியாக கைது செய்த பெண் போலீஸ்.. ரகசிய விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி..!

ஐபிஎல் 15-வது சீசனின் 50-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது.

இதில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 58 பந்துகளில் 92 ரன்கள் (12 பவுண்டரி 3 சிக்சர்) விளாசினார். இறுதி ஓவர்களில் வார்னருடன் இணைந்து ரோவ்மேன் பவல் 35 பந்துகளில் 6 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனை அடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஹைதராபாத் அணியில் நிக்கோலஸ் பூரான் மட்டுமே அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில், இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஓவரில் டேவிட் வார்னர் அடித்த பவுண்டரி ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இடது கை பேட்ஸ்மேனான வார்னர், புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை வலது கைக்கு மாறி பவுண்டரி அடித்தார். இதைப் பார்த்து புவனேஸ்வர் குமார் சற்று திகைத்து நின்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

CRICKET, DAVID WARNER, SRH, DC, IPL 2022, SRH VS DC, டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்