"அவர் எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி".. நெகிழ்ச்சியில் ரிஷப் பண்ட் சொன்ன வார்த்தை... பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், தனது பயிற்சியாளர் குறித்து பேசியது பற்றித்தான் இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

Advertising
>
Advertising

"புதின் அடுத்து இந்த வெப்பன் தான் யூஸ் பண்ண போறாரு.. கவனமா இருக்கனும்".. பைடன் தூக்கிபோட்ட குண்டு.. பதறும் உலக நாடுகள்..!

ரிஷப் பண்ட்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட், நடப்பு ஐபிஎல்  தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக விளையாட இருக்கிறார். இதற்கு முன்னர் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருந்தபோது தசைப்பிடிப்பு காரணமாக அவர் தொடரிலிருந்து விலக, அப்போது கேப்டனாக பண்ட் நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு டெல்லி அணி இறுதிப் போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வருடம் டெல்லி அணிக்கு முழு நேர கேப்டனாக விளையாட இருக்கிறார் ரிஷப் பண்ட்.

இதுவரையில் 84 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கும் பண்ட் 2498 ரன்களை குவித்து உள்ளார். இதில், ஒரு சதமும் 15 அரை சதங்களும் அடக்கம். டெல்லி வீரர்கள் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக இருப்பதாக கூறியுள்ள பண்ட், வீரர்களின் மன உறுதி மேலும் வலுவடைந்து உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

குடும்பத்தில் ஒருவர்

இந்நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளரும் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான ரிக்கி பாண்டிங்கை ரிஷப் பண்ட் புகழ்ந்துள்ளார். பண்ட், டெல்லி அணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில்," ரிக்கி பாண்டிங்கை சந்திப்பது எப்போதுமே சிறப்புக்குரியது. ஒவ்வொரு முறை அவரை பார்க்கும்போதும் குடும்பத்தில் ஒருவரை பார்ப்பது போலவே தோன்றும். களத்திலும் வெளியேயும் வீரர்களிடையே எனர்ஜியை ஏற்படுத்தக்கூடியவர். அவரை சந்திக்கும் ஒவ்வொரு வீரரும் ஏதாவது புதிதாக சொல்ல வேண்டும் என நினைப்பார்கள்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் போட்டியில் 5 முறை சேம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்தப் போட்டி வரும் மார்ச் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் உள்ள ப்ராபோர்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

 

"ஹிட்லர் கிட்ட இருந்தே 4 தடவை தப்பிச்ச மனுஷன்"... "இப்படி பண்ணீட்டீங்களே".. ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்த உக்ரைன் அமைச்சர்..!

 

CRICKET, RISHABH PANT, DC SKIPPER RISHABH PANT, COACH RICKY, IPL, IPL2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்