"அவரு கேப்டனா இருந்தது எல்லாம் போதும்... அடுத்த 'சீசன்'ல கேப்டன மாத்துங்க பா..." 'பரபரப்பு' கருத்தை வெளியிட்ட 'சஞ்சய் மஞ்ச்ரேக்கர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், இறுதி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

இதுவரை ஒருமுறை கூட இறுதி போட்டிக்கு முன்னேறாத டெல்லி அணி இந்தமுறை சிறப்பான ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இளம் வீரர்களை அதிகம் கொண்டுள்ள டெல்லி அணியை தலைமை தங்குவதும் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தான்.

இவர் மிகச் சிறப்பாக டெல்லி அணியை வழிநடத்தி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஷ்ரேயாஸ் ஐயரை டெல்லி அணி நிர்வாகம் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார். 'டெல்லி அணி இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததற்கு மிக முக்கிய காரணம், அதிக அனுபவம் இல்லாத டி 20 கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தான். கம்பீர் டெல்லியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக அணிக்குத் தலைமை தாங்கி வந்தார்.

ஆனால், தற்போது அவரை கேப்டன் பதவியில் இருந்து விடுவித்து அவரின் பேட்டிங்கில் இன்னும் திறம்பட செயல்பட வைக்க வேண்டும். டெல்லி அணியின் இடம்பெற்றுள்ள அஸ்வினை விட அந்த அணியில் கேப்டன் பதவிக்கு பொருத்தமாக யார் இருக்க முடியும்?. அதனால், அஸ்வினை அடுத்த கேப்டனாக டெல்லி அணி நியமிக்க வேண்டும்' என மஞ்ச்ரேக்கர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஒருமுறை கூட அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டுச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்