லட்டு மாதிரி கெடச்ச சான்ஸ்.. இப்படி மிஸ் பண்ணிட்டாரே.. கிரேட் எஸ்கேப் ஆன தவான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அவுட்டில் இருந்து தப்பியது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "தோனி இல்லன்னா.." சிஎஸ்கே பகிர்ந்த ஃபோட்டோ.. ரெய்னா செஞ்ச கமெண்ட்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு

ஐபிஎல் தொடரின் 64-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 63 ரன்களும், சர்பராஸ் கான் 32 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் ஜானி பேர்ஸ்டோ 15 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பானுகா ராஜபக்சேவுடன் ஷிகர் தவான் ஜோடி சேர்ந்தார்.

அப்போது லலித் யாதவ் வீசிய 5-வது ஓவரில், ஷிகர் தவான் அடித்த பந்தை லலித் யாதவ் ஓடி சென்று பிடித்தார். ஆனால் அதற்கு தவான் எதிர்முனைக்கு ரன் எடுக்க ஓடி வந்தார். ஆனால் இதை பானுகா ராஜபக்சே கவனிக்கவில்லை. அவர் பந்து எங்கே சென்றது என்பதை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் இருவரும் ஒரே முனையில் நின்றனர். இதனால் ஷிகர் தவான் அவுட்டாவது உறுதியானது.

அந்த சமயத்தில் தான் ஒரு டிவிஸ்ட் நிகழ்ந்தது. லலித் யாதவ் பந்தை தவறாக தூக்கி வீச, அதனை விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பிடிக்கவில்லை. இதனை பயன்படுத்தி கொண்டு பானுகா ராஜபக்சே வேகமாக மறு பக்கம் ஓடினார். இந்த நிலையில், இப்போட்டியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி எடுத்தது. அதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

CRICKET, PBKS, DC, LALIT YADAV, DC VS PBKS, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்