“அப்படியே என்ன பார்க்கிற மாதிரி இருக்கு.. இந்தியாவுக்காக 100 டெஸ்ட் விளையாடுவார்”.. இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய பாண்டிங்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா குறித்து ரிக்கி பாண்டிங் புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

‘ஓ.. அப்பவே இதை பத்தி பேசியிருக்கீங்களா’.. அஸ்வின் ரிட்டயர்டு அவுட் முடிவு.. RR கேப்டன் சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 20 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, விளையாடி 4 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளன. அதனால் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரீத்வி ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதில் 38, 10, 61, 51 என ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த நிலையில் ப்ரீத்வி ஷா குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானுமான ரிக்கி பாண்டிங் புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில், ‘ப்ரீத்வி ஷா விளையாடுவதை பார்க்கும்போது, என்னிடம் என்னென்ன திறமைகள் இருந்ததோ அத்தனையும் அவரிடம் உள்ளதைப் பார்த்தேன். ப்ரீத்வி ஷாவை இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகள் ஆடும் வீரராக நான் உருவாக்கிவிட்டால் என் பணி முடிந்தது. மனநிறைவுடன் நான் பணி செய்ததாக எனக்கு திருப்தி ஏற்படும்.

நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது, ரோஹித் ஷர்மா மிகவும் இளமையாக இருந்தார். ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்ட்யா விளையாடவில்லை. நான் அங்கு பயிற்சியளித்த நிறைய வீரர்கள் இப்போது இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடியிருக்கின்றனர். அதைத்தான் நான் இங்கேயும் செய்ய விரும்புகிறேன்’ என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று விளையாடிய ப்ரித்வி ஷா, பின்னர் காயம் காரணமாக சில காலம் விளையாடாமல் இருந்தார். இதனை அடுத்து விளையாடிய போட்டிகளில் சொதப்பியதால், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“அந்த ப்ளேயருக்கு ஹெல்ப் பண்ண ஒருத்தரும் இல்ல”.. MI அணியின் வீக்னஸ்.. இர்பான் பதான் பரபரப்பு கருத்து..!

CRICKET, IPL, DC COACH, RICKY PONTING, 100-TEST CRICKETER, INDIAN TEAM, DELHI CAPITALS, டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ப்ரித்வி ஷா, ரிக்கி பாண்டிங், ஐபிஎல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்