இந்தியா டீம துவம்சம் பண்ணனும்.. அதுக்கு அப்புறம் தான் 'Retirement'.. வார்னர் காணும் கனவு.. காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா : டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன் தனது லட்சியங்களை அடைய வேண்டும் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
ஒரு போட்டியில் கூட, ஆஸ்திரேலிய அணிக்கு எந்தவித அச்சுறுத்தலையும் இங்கிலாந்து அணி கொடுக்கவில்லை. மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணியின் கை தான் ஓங்கியிருந்தது. டெஸ்ட் போட்டிகளில் சிறப்புமிக்க, ஆஷஸ் தொடரை கைப்பற்றியுள்ளதால், மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் ஆஸ்திரேலிய அணி வீரர்கள்.
அதிரடி வார்னர்
அதே போல, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர், மிகச் சிறப்பான பேட்டிங்கை ஆஷஸ் தொடரில் வெளிப்படுத்தி வருகிறார். 35 வயதான வார்னர், ஐம்பது ஓவர், டி 20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வரக் கூடியவர். ஆஸ்திரேலியா மட்டுமில்லாமல், உலகெங்கிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர் ஆடிய போது, ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் உலக கோப்பை, டி 20 உலக கோப்பை என இரண்டையும் கைப்பற்றியுள்ளது.
டெஸ்ட் போட்டியில் லட்சியம்
அதே போல, ஐபிஎல் போட்டியில், இவரது தலைமையில் ஆடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கடந்த 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றியது. இப்படி கிரிக்கெட்டில் பல புகழை கொண்டிருக்கும் டேவிட் வார்னருக்கு, இன்னும் சில கனவுகள் மீதமுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறும் முன்பு, அதனை நிறைவேற்ற வேண்டும் என முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
இந்திய அணியை வீழ்த்தணும்
'நாங்கள் இதுவரை இந்திய அணியை அவர்களின் மண்ணில் வீழ்த்தியதில்லை. அது விரைவில் நடந்தால் நன்றாக இருக்கும். அதே போல, இங்கிலாந்து மண்ணிலும் டெஸ்ட் தொடரை நாங்கள் சமன் (2019 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடர்) தான் செய்துள்ளோம். ஆனால், அதனையும் வெற்றியாக மாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் நான் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுவதை பற்றி முடிவு எடுப்பேன்' என தெரிவித்துள்ளார்.
தடுமாறிய வார்னர்
டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக ஆட ஆரம்பித்த பிறகு, இங்கிலாந்து மற்றும் இந்தியா மண்ணில், எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் வென்றதில்லை. அதே போல, இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில், வெறும் 95 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் வார்னர். இவரை இங்கிலாந்து வேகப்பந்து ஸ்டூவர்ட் பிராட் 7 முறை அவுட் எடுத்திருந்தார்.
அதே போல, இந்தியாவில் கடைசியாக வார்னர் பங்குபெற்ற டெஸ்ட் தொடரிலும், பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இதற்கான ஒரு வாய்ப்பாகவும் தான் தனது டெஸ்ட் கனவு பற்றி டேவிட் வார்னர் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, பலரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில், வெற்றி பெற்று வரலாறு படைக்க வேண்டும் என நினைக்கும் போது, இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதே லட்சியம் என டேவிட் வார்னர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சந்தேகம் தான்.. 'சன் ரைசர்ஸ்' அணியை சீண்டிய டேவிட் வார்னர்.. வைரல் ட்வீட்
- செட்டிநாடு சிக்கன், பருப்பு குழம்பு..!- தென் ஆப்பிரிக்காவுல இந்திய அணி என்னென்ன சாப்டுறாங்கன்னு பாருங்க..!
- ‘என்னங்க இப்டி செஞ்சிட்டீங்க..!'- செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்... ஹர்திக் பாண்டியா செய்த அதிர்ச்சி காரியம்!
- "நீங்க எதுக்கு கேப்டனா இருக்கீங்க?.." கிழித்து தொங்க விட்ட 'பாண்டிங்'.. ஜோ ரூட்டிற்கு வந்த 'சோதனை'..
- முட்டி மோதிய 'பீட்டர்சன்' - 'பாண்டிங்'... "அப்ப நான் வாயை தொறக்கவே கூடாதா?".. காரசாரமாக நடந்த 'விவாதம்'.
- "கொழந்த மனசுயா உனக்கு!!".. 'இதயங்களை' வென்ற 'வார்னர்'!.. நெகிழ்ந்து ஆர்ப்பரித்த 'ரசிகர்கள்'.. 'வைரல்' வீடியோ!!
- ‘எனக்கு எதிரா சதி நடந்தது..!’- புது சர்ச்சையைக் கிளப்பும் ரவி சாஸ்திரி
- ‘பிடிச்சவுங்க ஒதுக்கும்போது… வலிக்குதுங்க..!’- வார்னர் இந்த அளவுக்கு கலங்கிப் போனதற்கு யார் காரணம்..?
- ‘இது காரணமா இல்லைன்னா வேற என்ன காரணமா இருக்கும்..?’- வார்னரை நீக்கியதற்கு ஹைதராபாத் அணி என்ன சொல்றாங்கன்னு பாருங்க..!
- கோலி இடத்துக்கு ‘இவரா’? ஐபிஎல் 2022-ல் ஆர்சிபி கேப்டன் ஆகப்போவது யார்?- முன்னாள் சுழற்பந்து வீச்சாளரின் ‘ஹின்ட்’..!