'ஆஸ்திரேலிய வீரர் வார்னரின் சென்சார் பேட்'... எதிரணிகளை காலி செய்ய புதிய 'யுக்தி'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பையில் எதிரணிகளை வீழ்த்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், பேட்டில் சென்சார் சிப் பயன்படுத்தி விளையாடினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரரான டேவிட் வார்னர், எதிரணிகளை வீழ்த்த புதிய யுக்தியை கையாள்கிறார். குறிப்பாக தாம் பயன்படுத்தும் பேட்டில் சென்சார் சிப் பொருத்தி விளையாடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிரணியின் பந்துகள் வரும் வேகத்துக்கு ஏற்ப எவ்வாறு பேட்டை கொண்டு செல்கிறோம், எதிரணி வீரர்களின் பந்துகள், பேட்டில் மோதும் வேகம் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட இந்த சிப்பால் முடியும். அதற்கு தான் அவர் சென்சார் சிப்பை தமது பேட்டில் வைத்திருக்கிறார்.

இதுபோன்று பேட்டில் சென்சார் சிப்பை பயன்படுத்த ஐசிசி, 2017-ம் ஆண்டு முறைப்படி அனுமதி அளித்துவிட்டது. வார்னர் கண்டறிந்து இந்த சிப்பை தமது பேட்டின் கைப்பகுதியில் பொருத்தி இருக்கிறார். இந்த சிப்பை பெங்களூரை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. பேட் சென்ஸ் என்ற பெயரில் இருக்கும் இந்த சிப், பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துக்கு ஏற்றார்போல, பேட்டை எந்தளவுக்கு வேகமாக இயக்க முடியும் என்பதை புள்ளி விவரங்களோடு அலசி, இந்த சிப் கூறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட் செய்யும் போது பேட் நகர்தல் உள்ளிட்டவை உள்வாங்கிக் கொண்டு, கிளவுட் ஸ்டோரேஜில் மொபைல் மூலம் சேமிக்கும் திறன் கொண்டது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்