‘ஐபிஎல் பாசம்’.. வில்லியம்சனை விட்டுக்கொடுக்காத வார்னர்.. இன்ஸ்டாகிராமில் ரசிகருக்கு ‘சூப்பர்’ பதிலளித்த வார்னர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு டேவிட் வார்னர் அளித்த பதில் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

‘ஐபிஎல் பாசம்’.. வில்லியம்சனை விட்டுக்கொடுக்காத வார்னர்.. இன்ஸ்டாகிராமில் ரசிகருக்கு ‘சூப்பர்’ பதிலளித்த வார்னர்..!
Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்தும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச (Aaron Finch) பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (Kane Williamson) 85 ரன்கள் எடுத்தார்.

David Warner sends heart-warming message to SRH fan

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 77 ரன்களும், டேவிட் வார்னர் 53 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டி ஆரம்பிக்கும் முன், சாம்பியன் பட்டத்தை யார் வெல்ல போகின்றனர்? என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதற்கு ரசிகர் ஒருவர், ‘வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ளனர், அதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியவில்லை’ என கமெண்ட் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த டேவிட் வார்னர் (David Warner), ‘நாங்கள் இருவருமே வின்னர்கள் தான்’ என பதிலளித்துள்ளார். வார்னரின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

DAVIDWARNER, T20WORLDCUPFINAL, NZVAUS, AUSVNZ, KANEWILLIAMSON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்