‘அவர எவ்ளோ பேசியிருக்கீங்க ..? இப்ப என்ன சொல்றீங்க?’- வார்னரின் விமர்சகர்களை ‘கப்-சிப்’ ஆக்கிய அந்த ‘பெண்’ யார்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னரை இத்தனைக் காலம் விமர்சனம் செய்து வந்து அத்தனை பேர்களுக்கும் தனது அதிரடி ட்வீட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் பெண் ஒருவர். ஆஸ்திரேலியாவின் டி20 உலகக்கோப்பை வெற்றியை அடுத்து ‘இந்தப்’ பெண் பதிவிட்டுள்ள ட்வீட் வைரல் ஆகியுள்ளது.

‘அவர எவ்ளோ பேசியிருக்கீங்க ..? இப்ப என்ன சொல்றீங்க?’- வார்னரின் விமர்சகர்களை ‘கப்-சிப்’ ஆக்கிய அந்த ‘பெண்’ யார்..?
Advertising
>
Advertising

ஐசிசி டி 20 உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையைக் கைப்பற்றி உள்ளது. குறிப்பாக, டேவிட் வார்னரின் அதிரடி ஆட்டத்தாலேயே ஆஸ்திரேலியாவின் வெற்றி சாத்தியமானது. இந்த சூழலில் இத்தனை நாட்களாக வார்னரை விமர்சித்த அத்தனை பேருக்கும் பதிலடி கொடுத்துள்ளார் வார்னரின் மனைவி கேண்டிஸ் வார்னர்.

David warner’s wife silences critics with a single tweet

துபாயில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா வென்ற பின்னர் கேண்டிஸ் வார்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஃபார்மில் இல்லை, ரொம்ப வயசு ஆய்டுச்சு, மெதுவாகிவிட்டார்! வாழ்த்துக்கள் டேவிட் வார்னர்” எனக் குறிப்பிட்டுள்ளார். 14-வது ஐபிஎல் போட்டியான ஐபிஎல் 2021-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வார்னர் விளையாடினார்.

அப்போது மிகவும் மோசமான ஆட்டத்துக்காக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்ற வார்னரின் அதிவேக 53 ரன்களே உதவின.

 

 

டி20 உலகக்கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வார்னர் வெளிப்படுத்தி அசத்தி உள்ளார். இந்த தொடரில் மொத்தமாக 289 ரன்களை அடித்து விளாசியுள்ளார். இதனால்  வார்னருக்கு டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு உள்ளது. ஐபிஎல் தொடரில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என விமர்சனங்களுக்கு உள்ளான வார்னர் நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு முதல் டி20 உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்துள்ளார்.

CRICKET, T20 WORLDCUP, WARNER, AUSTRALIA CRICKET TEAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்