ஏன் 'இப்படி' பண்றோம்னு ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லல...! 'ரொம்ப வலிக்குது...' 'எல்லாரும் வந்து கேக்குறாங்க...' - நான் அவங்ககிட்ட 'என்ன பதில்' சொல்வேன்...?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து டேவிட் வார்னர் வருத்தம் தெரிவித்துள்ளார் .

ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். இவரால் தான் 2016-ஆம் ஆண்டு ஐதராபாத் அணி கோப்பையை வென்றது.

இந்த நிலையில் இந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்படாத காரணத்தினால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக நியூசிலாந்த் அணியை சேர்ந்த சேர்ந்த கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் வந்த பிறகும் ஐதராபாத் அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் டேவிட் வார்னர், கடைசி சில ஆட்டங்களில் உட்கார வைக்கப்பட்டார். இந்த நிலையில், கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது பற்றி தனக்கு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும், 'ஐதராபாத் இரண்டாவது சொந்த ஊர்,, சன் ரைசர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட ஆர்வமாக தான் உள்ளேன், ஆனால், சன் ரைசர்ஸ் நிர்வாகம் என்ன முடிவெடுக்கும் என தெரியாது. அதைப் பொறுத்தே நான் விளையாடுவேனா என்பது குறித்து தெரியவரும்.. கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்று எல்லாரும் என்னை கேட்கிறார்கள், அதற்கு எப்படி பதில் சொல்வது? எனக்கே அதற்கான பதில் தெரியாது. தன்னை நீக்கியதற்கான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை' என வார்னர் கூறியுள்ளார்.

இந்த தொடரில் சென்னையில் நடந்த நான்கு போட்டிகள் மோசமாக அமைந்து விட்டது என்று கூறியுள்ள வார்னர், சன் ரைசர்ஸ் அணியில் மீண்டும் விளையாட வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை, ஆனால், அந்த முடிவு நிர்வாகிகளின் கையில் தான் உள்ளது என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்