பெரிய தொகைக்கு 'ஏலம்' போன 'மேக்ஸ்வெல்'... வேற லெவலில் நக்கலடித்த 'வார்னர்'... "என்ன பொசுக்குன்னு இப்டி சொல்லிட்டாரு?.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான ஏலம் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.

இந்த ஏலத்தில், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் கடுமையாக போட்டி போட்டது. இறுதியில், பெங்களூர் அணி அதிக தொகையான 14.25 கோடிக்கு அவரை வாங்கியது. முன்னதாக, கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த மேக்ஸ்வெல், சிறப்பாக ஆடாததால் அவரை விடுவித்தது. இதனால் மேக்ஸ்வெல் பெயர் ஏலத்தில் இடம்பெற்றிருந்ததையடுத்து, பெங்களூர் அணி அவரை எடுத்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று டி 20 போட்டி நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில், நியூசிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் வார்னர், வர்ணனையாளராக செயல்பட்டிருந்தார். அப்போது, மேக்ஸ்வெல் பந்து வீச வந்தார்.

அந்த சமயத்தில், ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு மேக்ஸ்வெல் ஏலம் போனதை கிண்டல் செய்து, கருத்து ஒன்றை வார்னர் தெரிவித்துள்ளார். 'ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு மோசமான முடிவு இல்லை. சிறந்த தொகைக்கு ஏலம் போயுள்ளார். ஆனால், ஒரு பக்கம் அதிக தொகைக்கு ஏலம் போனது சற்று ஆச்சரியமாகவே உள்ளது. ஒரு அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும், வேறு அணியில் இணைந்து ஆடுவதற்காக அதிக தொகையையும் பெறுகிறீர்கள்' என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்