"இன்னும் ரெண்டு குழந்தையை பெத்துக்கிட்டு அன்பு காட்ட சொல்லுங்க.." கோலி ஃபார்ம் குறித்து.. வேடிக்கையாக வார்னர் சொன்ன பதில்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில், அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டி, தொடர்நது வெற்றிகளை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால், ஒவ்வொரு போட்டிகளும் அசத்தலாக சென்று கொண்டிருக்கிறது.
அதே போல, முந்தைய ஐபிஎல் தொடர்களில் இளம் வீரர்கள் ஜொலித்து வந்ததை போல, இந்த முறையும் பல இளம் வீரர்கள், கிரிக்கெட் உலகை தங்கள் பக்கம் திருப்பி உள்ளனர்.
ஆயுஷ் படோனி, உம்ரான் மாலிக், சாய் சுதர்ஷன், அபிஷேக் ஷர்மா என பல வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை மிக கச்சிதமாக பயன்படுத்தி தங்கள் திறனையும் நிரூபித்து வருகின்றனர்.
விமர்சனத்தில் கோலி, ரோஹித்
ஆனால், அதே வேளையில் சில சீனியர் வீரர்கள் ஆட்டம், அதிக அளவில் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள விராட் கோலி மற்றும் மும்பை அணியிலுள்ள ரோஹித் ஆகியோர், அடுத்தடுத்த போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தனர். கடைசியாக, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய போது, 53 ரன்கள் அடித்து, தன்னுடைய முதல் அரை சதத்தை நடப்பு சீசனில் பதிவு செய்திருந்தார் கோலி. இருந்தாலும், தொடர்ச்சியாக அவர் ரன் அடிப்பாரா என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
வார்னர் கொடுத்த அறிவுரை
அதே போல, இந்தாண்டு டி 20 உலக கோப்பைத் தொடருக்கு முன்பு, விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர், பழைய ஃபார்முக்கு வர வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் டேவிட் வார்னரிடம், கோலிக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை என்ன என்பது பற்றிய கேள்வி, நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த வார்னர், "இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்று, அன்பை அனுபவிக்க வேண்டும்" என கூறிக் கொண்டே சிரித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த கேள்விக்கு என்னால் நிச்சயம் பதில் சொல்ல முடியாது. நான் இப்படி ஃபார்ம் அவுட்டில் இருந்த போது, யாரும் என்னிடம் இப்படி கேட்கவில்லை. இருந்தும், கோலியை போன்ற நிலை, அனைத்து வீரர்களுக்கும் நடப்பது தான்.
நீங்கள் எத்தகைய சிறந்த வீரராக இருந்தாலும் பரவாயில்லை. எப்பொழுதும் நீங்கள் ஏற்ற இறக்கங்களை கொண்டிருக்க தான் போகிறீர்கள். சில சமயம், மீண்டும் நீங்கள் ஏற்றத்தினை நோக்கிச் செல்ல எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம்" என கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தற்போது மோதி வருவது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- RCB vs CSK: இன்னைக்கு நடக்கப்போற மேட்ச் தோனிக்கு ரொம்ப ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா..?
- “வேற வழியில்ல.. தோனிக்கு அப்புறம் CSK-க்கு புது கேப்டனை அங்க இருந்துதான் எடுக்கணும்”.. முன்னாள் வீரர் ஓபன் டாக்..!
- "நான் பயங்கர பிரஷர்-ல இருந்தேன்.. அவர்தான் என்ன பண்ணனும்னு சொன்னாரு".. CSK பவுலர் முகேஷ் சொன்ன சீக்ரட்..!
- IPL 2022 : பிளே ஆப், ஃபைனல்ஸ் எங்க, எப்போ நடக்க போகுது??.. 'BCCI' வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
- "தோனிக்கு கெடச்ச ஆதரவு, எங்களுக்கு கெடைக்கல.." பல ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயம்.. யுவராஜ் சொன்ன 'பரபரப்பு' கருத்து..
- "இத பாத்து, டு பிளெஸ்ஸிஸ் பொறாமை பட்டுருப்பாரு போல.." போட்டிக்கு பிறகு ருத்துராஜ் சொன்ன விஷயம்..
- "மேட்ச் ஜெயிக்குற நேரத்துல.." திடீரென கோபப்பட்ட தோனி.. "எல்லாம் அந்த ஒரு Ball-க்காக தான்.."
- “நீ இல்லன்னா நான் என்ன செஞ்சிருப்பேன்”… அனுஷ்கா சர்மா பற்றி கோலியின் Romantic பதிவு!
- “ஒரு ஓவர்ல 4 சிக்ஸ் போனாலும் பரவாயில்ல.. ஆனா இதை மட்டும் எப்படியாவது பண்ணிடுங்க”.. பவுலர்களுக்கு தோனி கொடுத்த வேறலெவல் அட்வைஸ்..!
- இதனாலதான் CSK கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகினாரா?.. சீக்ரெட்டை உடைத்த தோனி..!