‘என்ன வார்னரே இப்படி சொல்லிட்டாரு..!’.. அப்போ இனிமேல் SRH ஜெர்சியில பார்க்க முடியாதா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெறாதது குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு டேவிட் வார்னர் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தபட்டது. தற்போது எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 40 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 8-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (SRH), இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் இருந்து வருகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதலே தொடர் தோல்விகளை ஹைதராபாத் அணி சந்தித்து வந்தது. அதனால் தொடரின் பாதியிலேயே டேவிட் வார்னர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின்னர் அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் (David Warner) இடம்பெறவில்லை. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக அறிமுக வீரர் ஜேசன் ராய் களமிறங்கினார்.

இதனிடையே ரசிகர் ஒருவர் ட்விட்டரில், ‘கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு வலிமையோடு வாருங்கள் வார்னர்’ என அழும் எமோஜியுடன் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த வார்னர், ‘இனிமேல் என்னைப் பார்க்க முடியாமல் கூட போகலாம். ஆனாலும் அணிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்’ என பதிலளித்துள்ளார்.

இதனால் மீண்டும் ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. முன்னதாக ப்ளேயிங் லெவனில் வார்னர் இடம்பெறாதது குறித்து பதிலளித்த ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் (Trevor Bayliss), அடுத்து வரும் போட்டிகளில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்