ஒருவேளை SRH உங்களை தக்க வைக்கலைன்னா என்ன பண்ணுவீங்க..? டேவிட் வார்னர் அதிரடி பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடுவது குறித்து டேவிட் வார்னர் பதிலளித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர் (David Warner) ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் சார்பாக விளையாடி வந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் தலைமையில் விளையாடிய ஹைதராபாத் அணி, தொடர் தோல்விகளை சந்தித்தது. அதனால் தொடரின் பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து வார்னரை அணி நிர்வாகம் நீக்கியது. இதனை அடுத்து நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங்கில் வார்னர் சொதப்பியதால், ப்ளேயிங் லெவனிலும் அவருக்கு இடம் கிடைக்காமல் இருந்து வந்தது. இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் அடுத்த ஆண்டு ஹைதராபாத் அணியில் வார்னர் விளையாடுவாரா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இதனிடையே அடுத்த ஆண்டு முதல் இரண்டு புதிய ஐபிஎல் அணிகளை இணைக்க உள்ளதாக பிசிசிஐ அறிவுத்தது. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. மேலும் ஏலத்துக்கு முன் ஒவ்வொரு அணியும், 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3 இந்திய வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர் அல்லது 2 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் என தேர்வு செய்துகொள்ளலாம் என கூறப்படுகிறது.

இதில் ஹைதராபாத் அணி, கேப்டன் கேன் வில்லியம்சனையும், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானையும் தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வார்னர், ஹைதராபாத் அணியால் விடுவிக்கப்படுவார் என்றே தெரிகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த டேவிட் வார்னர், ‘தற்போதைக்கு ஹைதராபாத் அணி என்னை தக்க வைக்காது என்றே நினைக்கிறேன். அப்படி அடுத்த ஆண்டு ஹைதராபாத் அணி என்னை நீக்கினால், ஐபிஎல் மெகா ஏலத்தில் எனது பெயரை பதிவு செய்வேன். அடுத்த ஆண்டு எந்த அணி என்னை ஏலத்தில் எடுத்தாலும் அந்த அணிக்காக முழுவீச்சில் விளையாட தயாராக இருப்பேன். ஒரு புதிய தொடக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என டேவிட் வார்ன கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்