அசால்ட்டா கடசி ஓவரில் பினிஷ் செய்த மில்லர் … மேட்ச் முடிஞ்சதும் போட்ட வைரல் Tweet

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்றைய குவாலிபையரில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் அணியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.

அசால்ட்டா கடசி ஓவரில் பினிஷ் செய்த மில்லர் … மேட்ச் முடிஞ்சதும் போட்ட வைரல் Tweet
Advertising
>
Advertising

முதல் குவாலிபயர்…

ஐபிஎல் 2022 தொடரில், நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபயர் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.  இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதி, அதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
முதல் குவாலிஃபயர் போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. அதன்படி ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் 89 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். தேவ்தத் படிக்கல் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.

David miller viral tweet after the IPL Playoff match

ரன் சேஸ்…

தொடர்ந்து 189 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் அணி, ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக ஆடி ரன் சேர்க்கத் தொடங்கியது. இருந்தாலும் கடைசியில் சில ஒவர்கள், போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனால், கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. பிரஷித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரில், முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி போட்டியை பினிஷ் செய்தார் மில்லர். இந்த இன்னிங்ஸில் டேவிட் மில்லர் 38 பந்துகளில் 68 ரன்களை சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக அணியின் கேப்டன் பாண்ட்யா 27 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  இந்த சீசனில்தான் முதல் முதலாக அறிமுகம் ஆனது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. பலரும், குஜராத் அணிக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Killer மில்லர்…

இந்நிலையில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதை வென்ற டேவிட் மில்லர் போட்டி முடிந்ததும், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “sorry Royals family” என்று கூறி டிவீட் செய்துள்ளார். கடந்த ஆண்டு அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவர் கடந்த சில சீசன்களாக மோசமான ஃபார்மில் இருந்ததால் அவரை ராஜஸ்தான் அணி தக்கவைக்கவில்லை. இதையடுத்து ஏலத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மில்லரின் அந்த டிவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DAVID MILLER, IPL 2022, GUJARATH TITANS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்