புற்றுநோயால் இறந்தது டேவிட் மில்லர் மகளா? ரசிகையா? முழு தகவல் இதோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பிரபலமான கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர்.
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் ஒரு சிறுமியின் இறப்பு செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று அறிவித்திருந்தார்.
அந்த துயர செய்தியை தனது இன்ஸ்டாகிராம் & முகநூல் பக்கத்தில் வீடியோ & புகைப்படங்கள் வழியாக பகிர்ந்துள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் மில்லர் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ள ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்றுள்ளார். இன்று நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மில்லர் பகிர்ந்த வீடியோவில் சிறுமியின் மரணச் செய்தியை எழுதியுள்ளார். அந்த பதிவில், " "ரிப் மை டியர் இளவரசி, உன் மீதான அன்பு எப்போதும் இருக்கும்!". என டேவிட் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "உன்னை மிகவும் மிஸ் செய்யப் போகிறேன் மை ஸ்கட்! நான் அறிந்ததிலேயே பெரிய இதயம் நீ. நீ எப்போதும் நம்பமுடியாத அளவிற்கு நேர்மறையாகவும் உன் முகத்தில் புன்னகையுடனும் சண்டையை வேறு நிலைக்கு கொண்டு செல்வாய். உனக்கு ஒரு குறும்பு பக்கம் உண்டு. உன் பயணத்தில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு சவாலையும் ஏற்றுக்கொண்டாய். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நேசிப்பதைப் பற்றி நீ எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தாய்! உன்னுடன் ஒரு பயணம் நடந்ததை நான் தாழ்மையுடன் உணர்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்! RIP" என டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த சிறுமி புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் புற்றுநோய் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் மில்லர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Annie என்ற அந்த சிறுமி டேவிட் மில்லரின் நண்பரின் மகள் என்றும் டேவிட் மில்லரின் அதிதீவிர ரசிகை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிராஜ் பண்ண விஷயத்தால.. கடுப்பான தீபக் & ரோஹித்..?? பரபரப்பை கிளப்பிய சம்பவம்!!
- புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்ட மனைவி.. புகைப்படத்தை பகிர்ந்து கணவர் போட்ட பதிவு.. "படிச்ச எல்லாருமே கண் கலங்கிட்டாங்க"
- 18 வருஷத்துக்கு முன்னாடி காணாம போனவர்.. லேடி கெட்டப்பில் வந்து சொன்ன விஷயம்.. நம்பிய மக்களுக்கு காத்திருந்த ஷாக்.!
- "எனக்கு கேன்சர் வந்துடுச்சு".. ஆன்லைனில் பணம் திரட்டிய பெண்.. ரூ.45 லட்சம் சேர்ந்த உடனே சுயரூபத்தை காட்டியதால் கொதித்துப்போன மக்கள்..!
- அசால்ட்டா கடசி ஓவரில் பினிஷ் செய்த மில்லர் … மேட்ச் முடிஞ்சதும் போட்ட வைரல் Tweet
- திடீரென.. கோபத்தில் தொப்பி'ய தூக்கி வீச பாத்த 'ஜடேஜா'.. "அது மட்டும் நடந்திருந்தா சிஎஸ்கே தான் ஜெயிச்சிருக்கும் போல"
- சுரேஷ் ரெய்னா குடும்பத்தில் பெரும் இழப்பு.. இறுதி மூச்சுவரை போராடினீர்கள்.. சின்ன தல உருக்கம்!
- 'தூக்கத்தில் பாதியில் எழும்பி கதறி கதறி அழுகை'... 'ஐயோ, கனவில் நடந்த சம்பவம்'... 'உடனே ஹாஸ்பிடல் ஓடிய பெண்'... எப்படிங்க உங்களுக்கு தெரியும், நெஞ்சை பிடித்து கொண்டு உட்கார்ந்த டாக்டர்!
- 90 நாட்களுக்கு மேல் தொடர்ந்த மாதவிடாய்!.. சுருண்டு விழும் அளவுக்க சோர்வு!.. இளம்பெண்ணுக்கு ஸ்கேன் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி!
- VIDEO: இப்போ சந்தோசம் தானே பாட்டி...? 'நெனச்சத நடத்திக் காட்டிய பேத்தி...' - நெகிழ வைக்கும் வைரல் வீடியோ...!