"அவரை எல்லாம் 'Red Card' குடுத்து தான் வெளிய அனுப்பனும்".. 'கோலி'யை கடுமையாக சாடிய முன்னாள் 'வீரர்'!... 'சர்ச்சை' சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் கிரிக்கெட் தொடரில், இந்திய கேப்டன் கோலியின் செயல்பாடு குறித்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில், அதிக முறை நடுவர்கள் அவுட் கொடுப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் குறிப்பாக, அம்பயர்ஸ் கால் மற்றும் சாஃப்ட் சிக்னல் முடிவுகள் குறித்து, தான் அதிகம் அதிருப்தி அடைந்ததாக, இந்திய கேப்டன் கோலி தனது எதிர்ப்பை கூறியிருந்தார். மேலும், சில போட்டிகளில் இது தொடர்பாக, தனது கோபத்தையும் கோலி வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் (David Lloyd), கோலி குறித்த மிகப் பெரிய விமர்சனம் ஒன்றை முன் வைத்துள்ளார். 'நான்காவது டி 20 போட்டியில், டேவிட் மலான் ஒரு தாழ்வான கேட்சை எடுக்கும் போது, இங்கிலாந்து அணி வீரர்கள், நடுவரை சாஃப்ட் சிக்னல் முறையில் அவுட் தருமாறு வலியுறுத்தியதாக கோலி கூறுகிறார். சாஃப்ட் சிக்னல் என்பதே, கள நடுவர்களுக்கு அதிகாரம் இருப்பதை உறுதி செய்வதற்காகத் தான்.
அந்த டி 20 போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் போட்டி நடுவர் நிதின் மேனனுக்கு அழுத்தம் கொடுத்தார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் எனக்கு உறுதியாக தெரியும். இந்த சுற்றுப்பயணம் முழுவதும், இந்திய கேப்டன் கோலி, நடுவர்களுக்கு அழுத்தம் கொடுத்தும், அதிக நெருக்கடி கொடுத்தும், அவர்களை அவமதித்து வந்துள்ளார்.
அதே போல, களத்தில் அவுட்டாகி செல்லும் வீரர்கள் மீது கோலி, தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை எதிர்க்கிறார். நேருக்கு நேர் மோதல் என்ற போக்குடன் அவர்களை அணுகுவதை, விராட் கோலி, கச்சிதமாக செய்து வருகிறார். இதனை எல்லாம், ஒன்றும் செய்ய முடியாமல், பல் பிடுங்கப்பட்ட ஐசிசி, வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், நடுவர்கள் குறை மதிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், நடுவர்களை விட, இவர்கள் தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது போலவும் சில வீரர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். முதல் ஒரு நாள் போட்டிக்கு முன்பாக, அம்பயர்ஸ் கால் என்பதை அகற்ற வேண்டும் என கோலி கூறினார். பந்து ஸ்டம்பை லேசாக தாக்குவதாக இருந்தாலும், அவுட் தர வேண்டியது தான் என்கிறார் கோலி.
ஆனால், கோலிக்கு ஒன்றும் தெரியவில்லை. அப்படி அவர் சொல்வது போல செய்தால் என்ன ஆகும். பைல்ஸ்களை தூக்குவது போல போகும் பந்துகள் எல்லாம் அவுட் என்றால், எல்லா டெஸ்ட் போட்டிகளும் 2 நாட்களில் முடிந்து விடும். ஒரு நாள் போட்டிகள் அரை நாளிலேயே முடிந்து விடும்.
போட்டி நடுவர்களுக்கு, அவர்களுக்கான அதிகாரத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இது போன்ற செயலில் ஈடுபடும் வீரர்களை வெளியே அனுப்ப மஞ்சள் மற்றும் சிகப்பு அட்டை காண்பிக்கும் அதிகாரத்தை நடுவர்களுக்கு வழங்க வேண்டும். கோலி போன்ற ஒரு பெரிய வீரர், தான் சொல்வதிலும், செய்வதிலும், மிக கவனமாக இருக்க வேண்டும்' என டேவிட் லாய்ட் விமர்சனம் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்ன பிரதர், இப்போ எப்படி இருக்கு??..." 'ரிஷப் பண்ட்' நக்கலாக கேட்ட 'கேள்வி'... வாயே தொறக்காம பதில் சொன்ன 'ரோஹித்'... 'வைரல்' வீடியோ!!
- "அட, என்னங்க இவரு.. எப்பவும் எதையாவது சொல்லிட்டே இருக்காரு..." மீண்டும் 'வாகன்' போட்ட 'ட்வீட்'... கோபத்தின் உச்சத்திற்கே சென்ற 'ரசிகர்கள்'!!
- அதிரடி '50' போட்ட 'க்ருணால்'... அடுத்த சில நொடிகளில் நடந்த 'சண்டை'... 'அதிர்ச்சி'யுடன் பார்த்த 'கோலி'... பரபரப்பு 'வீடியோ'!!
- "சத்தியமா வார்த்த ஒன்னும் வரல..." உடைந்து அழுத 'இந்திய' வீரர்.. "பாக்குறவங்க கண்ணே 'கலங்கி' போச்சு'ங்க.." மனதை நொறுக்கும் 'வீடியோ'!!
- "ஒரு 'மேட்ச்' கூட முடியல, அதுக்குள்ளயா??..." பரபரப்பை ஏற்படுத்திய 'வாகனின்' 'ட்வீட்'!.. கடுப்பான 'இந்திய' ரசிகர்கள்!!
- 'மேட்ச்' ஆரம்பிப்பதற்கு முன்னர்... கண்கலங்கிய 'சகோதரர்'... தேற்றிய 'ஹர்திக் பாண்டியா'... நெகிழ வைக்கும் காரணம்.. 'வைரல்' வீடியோ!!
- 'அவர் அவுட் ஆஃப் பார்மில் இருக்காரு, ஆனா வாய்ப்பு கிடைக்குமா?'... 'ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் இவரா?'... இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை!
- 'சூர்யகுமார்' குறித்து 'கோலி' சொன்ன அந்த 'விஷயம்'... "கேப்டனே சொல்லிட்டாரு, இதுக்கு மேல என்னய்யா வேணும்..." வேற லெவலில் குதூகலமான 'ரசிகர்கள்'!!
- "அவரு ஒழுங்கா ஆடாதனால தான்.. இந்தியா 'டீம்'க்கு ஒரு நல்லது நடந்துச்சு..." என்ன பொசுக்குன்னு இப்டி சொல்லிட்டாரு??... சுனில் கவாஸ்கர் 'அதிர்ச்சி' கருத்து!!
- '"One Day' மேட்ச்'ல இவங்க தான் ஓப்பனிங்..." 'ரசிகர்கள்' மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு.. 'கோலி' சொன்ன அசத்தல் 'பதில்'!!