VIDEO: 'இது உங்களுக்கு தேவை இல்லாத வேலை...' 'விளையாட்டுன்னா அத பத்தி மட்டும் கமெண்ட்ரி பண்ணுங்க...' - கடுப்பான வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டேல் ஸ்டெய்ன் தோற்றம் குறித்து கமெண்ட்ரியில் கூறிய செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் கருத்து மோதலை உருவாக்கியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று டேல் ஸ்டெய்ன் விளையாடினார். ஸ்டெய்ன் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்நிலையில் கிரிக்கெட் போட்டி தொடரின் போது நியூசிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சைமன் டவுல், ஸ்டெய்னின் முடி அலங்காரம் குறித்து மனம் புண்படுத்தும் விதமாக கூறிய கமெண்ட் மற்றும் அதுகுறித்தான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சைமன் ஸ்டெய்னனை குறிப்பிட்டு, 'அந்த தலைமுடியுடன் வாழ்க்கை நெருக்கடியைக் கொண்டிருக்கிறார்' என கிண்டலாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் டெய்ல் மற்றும் கோவர் ஸ்டெய்னின் புதிய சிகை அலங்காரம் பற்றி, 'அந்த தலைமுடியுடன் கூடிய வாழ்க்கை மிகவும் கஷ்டமானது' என டவுல் கூறும் போது, 'இது குவாரண்டைன் முடி' என கோவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து டவுலைக் கண்டிக்கும் விதமாக ஸ்டெய்ன் தனது கோபத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

அதில், 'உங்கள் வேலை விளையாட்டைப் பற்றி பேசுவது, எனவே அதை மட்டும் செய்யுங்கள். யாரையும் அவர்களின் எடை, பாலியல் தேர்வுகள், இனப் பின்னணிகள், வாழ்க்கை முறை அல்லது சிகை அலங்காரங்களுக்காக புண்படுத்தும்படி பேச வேண்டாம். ஒரு மனிதனாக உங்களுக்கு  அது தேவை இல்லாத விஷயம்' என ட்வீட் செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்