ஆர்சிபி-யோட 'அடுத்த' கேப்டன் யாரு...? எல்லாருமே 'அவரு' தான்னு நினைச்சிட்டு இருப்பாங்க...! 'அங்க தான் சின்ன டிவிஸ்ட்...' - 'சீக்ரெட்' உடைத்த டேல் ஸ்டெயின்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டி-20 கிரிக்கெட் தொடரில் இனி கேப்டனாக தொடர போவதில்லை என அறிவித்த பின் அடுத்த கேப்டன் யார் என்ற பெரிய கேள்விக்குறி பெங்களுரு ரசிகர்களுக்கிடையே எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழும் விராட் கோலி கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி வரும் உலகக் கோப்பை டி20 தொடர் முடிந்தவுடன் இந்திய அணிக்கு டி20 கேப்டனாக இனி தொடரப் போவதில்லை என அதிரடியாக அறிவித்தார்.

அதோடு டி-20 தொடரை தவித்து, மற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே இந்திய அணிக்கு தலைமை தாங்கப் போவதாகவும் குறிப்பிட்டார். விராட் கோலியின் இந்த அதிரடி  முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அன்பு தொல்லை செய்து வந்தனர்.

இதற்கு விளக்கமளித்த விராட் தன்னுடைய இந்த திடீர் முடிவுக்கு காரணம் தற்போதிருக்கும் வேலைப்பளு தான் எனவும் தன் ரசிகர்களுக்கு தெரிவித்து இருந்தார்.

தற்போது ஐபிஎல் டி-20 தொடரில் பெங்களுரு அணிக்கு கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி பெங்களூரு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மேலும் ஒரு  அதிரடி முடிவை தன் சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில், '2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இனி கேப்டனாக பதவி ஏற்கப் போவதில்லை. ஆனால் நிச்சயமாக இறுதிவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஒரு வீரராக இடம்பெற்று விளையாடுவேன்' என குறிப்பிடுள்ளார்.

ஐபிஎல் தொடரின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதற்கும் வேலைப்பளு தான் காரணம் என்று தெரிவித்திருந்தார்.

விராட் கோலி அவர்களின் இந்த அறிவிப்பிற்கு பிறகு பெங்களூரு அணிக்கு யார் அடுத்த கேப்டன்?, அடுத்த கேப்டன் யாராக இருந்தால் பெங்களூரு அணி பலம் வாய்ந்த அணியாக திகழும் என ரசிகர்களிடையே பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு பெங்களூரு அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் பெங்களூரு அணி கேப்டன் பதவி குறித்து பேசியுள்ளார்.

அதில், 'விராட் கேப்டன் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்த நிலையில் அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக ஒருவர் இருக்க வேண்டும் என்றால் அது நிச்சயம் பெங்களூரு அணியில் விளையாடிய வீரராகவே இருக்கவேண்டும்.

அதன் அடிப்படையில் பார்த்தால், கே.ல் ராகுல் பெங்களூரு அணியின் சிறந்த கேப்டனாக விளங்குவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முன் கடந்த 2016-ஆம் ஆண்டு கே.எல் ராகுல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கோலியுடன் ஜோடி சேர்ந்து மிக சிறந்த முறையில் விளையாடினார்.

அதன்பின் 2017-ஆம் ஆண்டு காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை. அதோடு 2018-ஆம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கே.எல் ராகுலை அணியில் இருந்து நீக்கிவிட்டது.

அதன்பின் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ராகுலை 11 கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்து அணியின் கேப்டன் பதவியை கொடுத்தது. தற்போது வரை கே.எல் ராகுல் பஞ்சாப் அணிக்காக கேப்டன் பதவி ஏற்று அணியை வழிநடத்தி வருகிறார்.

தற்போது பெங்களூரு அணியில் இருக்கும் ஏபி டிவில்லியர்ஸ் ஒரு மிகச்சிறந்த வீரர் மற்றும் கேப்டன் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆனால், ஏபி டி வில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக திகழ்வதற்கு வாய்ப்புகள் கிடையாது. ஏனென்றால் அவர் கூடிய விரைவில் தனது ஓய்வு அறிவிக்க திட்டமிட்டுள்ள நிலையில் அவரை கேப்டனாக நியமிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை' என டேல் ஸ்டெயின் குறிப்பிடுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்