‘முடிவுக்கு வந்த வேகப்புயலின் சகாப்தம்’.. இவர் பவுலிங் போட வந்தாலே பேட்ஸ்மேனுக்கு அல்லு விட்ரும்.. மொத்த கிரிக்கெட் உலகமும் திரண்டு வாழ்த்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பமான திகழ்ந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் டேல் ஸ்டெய்ன். தனது மிரட்டலான பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். மணிக்கு 140 கிலோ மீட்டருக்கும் மேல் பந்துவீசி, அதை ஸ்விங் செய்யும் திறமை கொண்டவர். இதனால் இவர் பவுலிங் வீச வந்தாலே பேட்ஸ்மேன்களுக்கு பயம் தொற்றிக்கொள்ளும்.

கடந்த 2004-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுகமான டேல் ஸ்டெய்ன், இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 26 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் 125 ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளையும், 47 டி20 போட்டிகளில் 65 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2020-ம் ஆண்டு நடந்த டி20 தொடரில் டேல் ஸ்டெய்ன் விளையாடினார்.

இந்த நிலையில் இன்று (31.08.2021) அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், ‘நான் அதிகமாக விரும்பும் விளையாட்டில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறேன். நண்பர்கள், சக வீரர்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த பயணம் மிகவும் சிறப்பானது’ என டேல் ஸ்டெய்ன் பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ், பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம், நியூஸிலாந்து வீரர் ஜிம்மி நீஷம், ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் என மொத்த கிரிக்கெட் உலகமும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்