‘12 பேர்’ மட்டுமே பார்த்த போட்டியில்... 4 ‘உலக’ சாதனைகள்... இப்படியும் ஒரு சர்வதேச ‘டி20’ போட்டி!...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

12 பேர் மட்டுமே பார்த்த ருமேனியா கோப்பை டி20 சர்வதேச போட்டியில் 4  உலகசாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி ஐரோப்பிய கிராமம் ஒன்றில் நடத்தப்பட்ட ருமேனியா கோப்பை டி20 சர்வதேச போட்டியில் 4 டி20 சர்வதேச உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்தப் போட்டியைப் பார்க்க வெறும் 12 பார்வையாளர்களே வந்திருந்த நிலையில், முதலில் பேட் செய்த செக் குடியரசு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்களைக் குவித்துள்ளது. 

இந்த அணியின் பேட்ஸ்மென் விக்ரமசேகரா 35 பந்துகளில் சதம், 36 பந்துகளில் 8 பவுண்டரிகள், 10 சிக்சர்களுடன் 104 என அசத்தலாக விளையாடி ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்தப் போட்டியில் அடுத்து விளையாடிய துருக்கி அணி 21 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதையடுத்து 257 ரன்கள் வித்தியாசத்தில் செக் குடியரசு அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் சுரேஷ் விக்ரமசேகரா 35 பந்தில் அடித்த சதம் டி20 சர்வதேச கிரிக்கெட்டின் இணைந்த அதிவேக சதமாகும். செக் குடியரசு எடுத்த 278 ரன்கள் டி20 கிரிக்கெட்டின் இணைந்த அதிக ரன்களாகும். அதேபோல ஒரு டி20 போட்டியில் ஆப்கான் அணி அயர்லாந்துக்கு எதிராக 278 ரன்களை எடுத்துள்ளது. எதிரணியான துருக்கி எடுத்த 21 ரன்கள் டி20 கிரிக்கெட்டின் மிகக் குறைந்த ரன் ஆகும். மேலும் அந்த அணியின் 8 பேட்ஸ்மென்கள் டக் அவுட் ஆனதும் ஒரு உலக சாதனை ஆகும்.

இத்தனை சாதனைகளை நிகழ்த்திய செக் குடியரசு அணி அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரியா அணியிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. ஐசிசி உறுப்புநாடுகளுக்கு இடையே நடைபெறும் அனைத்து டி20 போட்டிகளுக்கும் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டதையடுத்து இந்த சாதனை வெளியே தெரியவந்துள்ளது.

CRICKET, T20, RECORDS, CZECH REPUBLIC, TURKEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்