பழைய ‘பகை’ இன்னும் மனசுல இருக்கு.. ராஜஸ்தான் டீம்க்கு ‘பயம்’ காட்டும் அந்த சிஎஸ்கே வீரர் யார் தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.

நடப்பு ஆண்டு ஐபில் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை அடுத்து இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் ஜடேஜா துருப்பு சீட்டாக இருப்பார் என கருதப்படுகிறது.

கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜடேஜா விளையாடினார். ஆனால் 2010ம் ஆண்டு ஜடேஜா வேறு அணிக்கு தாவ முயன்றதாக ராஜஸ்தான் அணி குற்றம் சாட்டியது. தங்களது அனுமதி இல்லாமல் மற்ற அணிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவதாக அந்த அணி நிர்வாகம் புகார் அளித்தது. அதனால் ராஜஸ்தான் அணி மீது ஜடேஜா கடும் அதிருப்தி அடைந்தார்.

இதன்பின்னர் சிஎஸ்கே அணி ஜடேஜா தங்கள் அணியில் எடுத்து தற்போது வரை ஆட வைத்து வருகிறது. அவரை அணியின் முக்கிய வீரராகவும் நடத்தி வருகிறது. ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளை விட ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஜடேஜா சிறப்பாக பந்து வீசியுள்ளார். அந்த அணிக்கு எதிராக 14 இன்னிங்ஸில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

அதேபோல் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அதிக முறை வீழ்த்தியுள்ளார். 11 இன்னிங்ஸில் ஸ்மித்தின் விக்கெட்டை 5 முறை வீழ்த்தியுள்ளார். அதனால் இன்றைய போட்டியிலும் ஜடேஜா அதேபோல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்