'கடுமையான விதிமீறலால்'... 'குவாரண்டைனுக்கு உள்ளான CSK வீரர்'... 'இப்படியே போனா போட்டியிலிருந்தே தடை தான்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் பயோ பபுள் விதிமுறைகளை மீறியதாக சிஎஸ்கே வீரர் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு இடையே ஐபிஎல் போட்டிகள் நடப்பதால் இந்த முறை ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்து வருகிறது. அத்துடன் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொடரின் தொடக்கத்தில் சிஎஸ்கே வீரர்கள் இருவருக்கு கொரோனா வந்து அவர்கள் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டு இருக்கும் விதிதான் பயோ பபுள் (Bio-Bubble). இந்த விதியின் படி ஐபிஎல் வீரர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு உள்ளே மட்டுமே செல்ல முடியும். பயோ பபுள் பகுதிக்கு வெளியே இருக்கும் இடங்களுக்கு வீரர்கள் செல்ல முடியாது. அதேபோல் இந்த பயோ பபுள் பகுதிக்குள் வெளி ஆட்கள் வர முடியாது.

ஐபிஎல் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருக்கும் பயோ பபுள் இடங்களுக்கு வெளியே ஹோட்டலில் வேறு எந்த பகுதிக்கும் வீரர்கள் செல்ல கூடாது. அதேபோல் போட்டி, பயிற்சி தவிர வேறு காரணங்களுக்காகவும் ஹோட்டலை விட்டு வீரர்கள் வெளியே செல்ல முடியாது. இந்த சூழலில்தான் சிஎஸ்கே வீரரான கே எம் ஆசிப் இந்த விதியை மீறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சிஎஸ்கே பயிற்சிக்கு சென்றுவிட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பிய ஆசிப் தன்னுடைய அறை சாவியை மைதானத்தில் மறந்து வைத்துவிட்டதால் புதிய சாவியை வாங்குவதற்காக ரிசப்ஷன் வந்துள்ளார். ஆனால் இந்த ரிஷப்ஷன் பகுதி இந்த பயோ பபுள் பகுதிக்கு வெளியே இருக்கும் பகுதி என்பதால் இது விதிமீறல் எனக் கூறப்பட்டு  6 நாட்கள் இவர் தனிமைப்படுத்தப்பட்டு, தற்போது பயிற்சிக்கு திரும்பியுள்ளார். இதேபோல மூன்று முறை இந்த விதிமீறலில் ஈடுபட்டால் அந்த வீரர் இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்தே விளையாட தடை விதிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்