“SPARK இல்லனு சொன்ன ஒரே காரணத்துக்காக”.. ‘அடிச்சு துவம்சம் பண்ணிய இளம் வீரர்கள்!’.. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் CSK வெற்றி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

13-வது ஐபிஎல் சீசனின் 44-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதிய சென்னை அணி, 3 தொடர் தோல்விகளுக்கு பிறகு தற்போது வென்றுள்ளது.

முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் ஆடினர். கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் பாட்னர்ஷிப் கடைசி 5 ஓவர்களில் அதிரடி காட்டி ஆடினர். இதில் தீபக் சஹார் வீசிய 18-வது ஓவரில் டி வில்லியர்ஸ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கோலி அரை சதம் அடித்தார்.

மொத்தத்தில் சிறப்பாக 3 ஓவர்கள் பவுலிங் வீசிய சாம் கரண் 19 ரன்களை மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 2 ஓவர்களை வீசிய சஹார் 31 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இவரது ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே பெங்களூர் அணிக்கு கிடைத்தது. பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 146 என்கிற இலக்குகளை நோக்கி களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் வெளுத்து கட்டினர். ஸ்பார்க் இல்லை என்று தோனி சொன்ன ஒரே காரணத்துக்காக காட்டடி அடித்து மிரளவைத்தனர். அதிகபட்சமாக காய்க்வாடு 51 பந்துகளில் 65 ரன்களும், அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். இதனால் சென்னை அணி, 2 விக்கெட் இழப்புக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் 18.4 ஓவர்களில் 150 ரன்களை எடுத்து அபாரமாக வென்றது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்