சிஎஸ்கே ‘இதமட்டும்’ இன்னைக்கு பண்ணா.. மும்பைக்கு அடிக்கும் அந்த ‘ஜாக்பாட்’.. நடக்குமா அந்த ‘மிராக்கிள்’?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று நடைபெற உள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.
நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த ஐபிஎல் சீசனில் 8-வது வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. இதனால் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் +1.186 நெட் ரன்ரேட் வைத்துள்ளது. இந்த ஒரு காரணத்தால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது. ஆனாலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது.
ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் தலா 14 ஆட்டங்களில் விளையாடுகின்றன. இதில் குறைந்தது 9 வெற்றிகளைப் பெற்ற அணியே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது. இதனால் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு தகர்ந்தது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றுவிட்டால் மும்பை அணி 9 வெற்றிகளைப் பெறுவதற்கு முன்பே முதல் அணியாக பிளே ஆஃப்புக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை கொல்கத்தா வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் ரேஷில் மும்பையுடன் சேர்ந்துகொள்ளும்.
மும்பைக்குப் பின்னால் 14 புள்ளிகளுடன் உள்ள பெங்களூர், டெல்லி ஆகிய இரு அணிகள். வரும் நவம்பர் 2ம் தேதி மோதுகின்றன. இதனால் இந்த இரு அணிகளில் ஓர் அணியால் மட்டுமே அதிகபட்சமாக 16 புள்ளிகளைப் பெற முடியும். பஞ்சாப் அணி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வென்று 16 புள்ளிகள் பெற்றாலும் மும்பைக்குப் பாதிப்பு நேராது. இதனால் மும்பை அணி பிளே ஆஃப் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
மும்பை அணி 9-வது வெற்றியைப் பெறும் முன்பே இன்று சிஎஸ்கே வெற்றி பெற்றால் பிளே ஆஃப் தகுதி என்ற ‘ஜாக்பாட்டை’ மும்பை அணியால் பெற முடியும். இல்லையென்றால் இனி உள்ள இரு போட்டிகளில் ஒன்றில் வென்றாக வேண்டிய சூழ்நிலைக்கு மும்பை அணி சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முதல் முறையா இப்படி நடக்குது?!!'... 'சப்போர்ட்டுக்கு திரண்ட வெளிநாட்டு வீரர்களால்'... 'மேலும் அதிகரிக்கும் சிக்கல்???'... 'எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!'...
- 'களத்தில் கோலி முறைக்க'... 'அந்தப்பக்கம் வைரலான ரவி சாஸ்திரியின் ட்வீட்!!!'... 'என்ன தான் நடக்குது இந்திய அணியில்???'...
- 'ரோஹித் சொல்லிதான் அனுப்பினாரு'... 'போட்டிக்குப் பின்னும் தெறிக்கவிட்ட'... 'சூர்யகுமார் யாதவின் மாஸ் பேச்சு!!!'...
- மனசுல இருந்த பல வருஷ ‘வலி’.. இது போதுமா இப்போ அவர டீம்ல எடுக்க..? ‘வெகுண்டெழுந்த’ ரசிகர்கள்.. வைரல் வீடியோ..!
- இந்த ‘ஆக்ரோஷம்’ ஞாபகம் இருக்கா?.. பல வருஷம் கழிச்சு ‘மறுபடியும்’ நடந்த ஒரு வெறித்தனமான சம்பவம்..!
- இனிமேல் ‘தல’ய இந்த ஜெர்சியில பார்க்க முடியாதே.. உருகிய ரசிகர்களுக்கு பிசிசிஐ கொடுத்த ‘சர்ப்ரைஸ்’..!
- இந்த மேட்ச்லையும் ‘ஹிட்மேன்’ இல்லையா..! என்னதான் ஆச்சு..? அவர இப்டி பார்க்க முடியல..!
- "எனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும்... அவரு கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டாரு"... 'சேவாக் பரபரப்பு கருத்து!!!'...
- 'ஸ்கெட்ச் ரோஹித்துக்கு மட்டும் இல்ல... மும்பை இந்தியன்ஸ் 'டீம்'க்கு!?'.. இந்திய அணியில்... சூர்யகுமார் யாதவ் நிராகரிப்புக்கு பின்... வெளியான 'பரபரப்பு' தகவல்!
- 'எத்தன டிவிஸ்ட்டு?!!'... 'இனி இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கே இல்ல!!!'... 'உச்சகட்ட பரபரப்பில் இந்த வார போட்டிகள்!'...