சிஎஸ்கே ஜெயிச்சதுனால மும்பைக்கு நடந்த ‘மிராக்கிள்’.. இனி ‘அவங்கள’ யாராலும் ஒன்னும் பண்ண முடியாது..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வென்றதன் மூலம் மும்பை அணிக்கு ஒரு நன்மை நடந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 49-வது லீக் போட்டி இன்று (29.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடரஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா 87 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் அடித்து அசத்தினார். அடுத்து வந்த அம்பட்டி ராயுடு 38 ரன்களில் அவுட்டாக, கேப்டன் தோனி 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த ஜடேஜா, சாம் குர்ரன் கூட்டணி அணியின் வெற்றி பொறூப்பை கையில் எடுத்தது. கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது களத்தில் நின்ற ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். இன்றைய போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா அணியின் ப்ளே ஆஃப் கனவு தகர்ந்தது.

ஆனால் இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றதால் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஏற்கனவே 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் +1.186 நெட் ரன்ரேட் வைத்துள்ளது. இந்த நிலையில் ப்ளே ஆஃப் ரேஷில் இருந்த கொல்கத்தா தோல்வி பெற்று வெளியேறியதால், மும்பை அணி எளிமையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிட்டது. இனிவரும் போட்டிகளில் தோற்றாலும் அந்த அணிக்கு பெரிய பாதிப்பு ஏற்படபோவதில்லை. இந்த ஐபிஎல் சீசனில் முதலாவதாக ப்ளே ஆஃப்புக்கு நுழையும் அணி மும்பை இந்தியன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்