‘இன்னைக்கு இருக்கு கச்சேரி’!.. வெற்றியை தீர்மானிக்குறதுல ‘இதுக்குதான்’ முக்கிய பங்கு இருக்கு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று மோதவுள்ளன.

14-வது சீசன் ஐபிஎல் தொடரில், இதுவரை 18 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிய (4 போட்டிகள்) அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று (25.01.2021) மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் விளையாட உள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோதவுள்ள முதல் போட்டி இது என்பதால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.

இன்று போட்டி நடைபெற உள்ள வான்கடே மைதானத்தில், இதுவரை 82 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 39 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 43 முறையும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக சேஸிங் செய்யும் அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் வெற்றியை தீர்மானிப்பதில் டாஸ் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 235. கடந்த 2015-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஸ்கோரை எடுத்தது. அதேபோல் குறைந்தபட்ச ஸ்கோர் 67, கடந்த 2008-ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி எடுத்தது.

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 17 முறையும், பெங்களூரு அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லாமல் சென்றுள்ளது. அதனால் இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்