'கைய தூக்கின அம்பயர்... தோனியின் 'கோப' முகத்தை பார்த்ததும் நொடியில் செய்த காரியம்'... - 'நீங்களே இப்படி பண்ணலாமா?'... 'சர்ச்சை சம்பவத்தால் 'கொந்தளித்த' ரசிகர்கள்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று சிறிய இடைவெளிக்குப் பின் 2 புள்ளிகளை பெற்றுள்ளது.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டுபிளெசிஸ், வாட்சன் என்ற தொடக்க ஜோடியை உடைத்து சாம் கரனை தொடக்கத்தில் இறக்கியது போன்ற ஒரு சில மாற்றங்களுடன் களமிறங்கிய சென்னை அணி  20 ரன்கள் வித்தியாசத்தில் மிகவும் தேவைப்பட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் அந்தப் போட்டியின்போது நடந்த ஒரு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய போட்டியில் 18 ஒவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அந்த அணி வெற்றி பெற 27 ரன்களும், சூப்பர் ஓவருக்குச் செல்ல 26 ரன்களும் தேவைப்பட்டது. அப்போது ஷாபாஸ் நதீம் 4 ரன்கள், ரஷீத் கான் 3 பந்துகளில் 11 ரன்கள் என அச்சுறுத்தும் நிலையிலேயே இருந்தனர்.

அதன்பிறகு 19வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீச, முதல் பந்தில் ரஷீத் கான் 2 ரன்கள் எடுத்தார். 2வது பந்தை வீச பந்து ஆஃப் திசையில் வைடாகச் செல்ல, நடுவர் வைடு எனக் கூறினார். அடுத்த பந்து மீண்டும் அதே போல் பக்கவாட்டு வெள்ளைக்கோட்டைக் கடந்து வைடு போல செல்ல,  ஆஸ்திரேலிய நடுவர் பால் ரெய்ஃபல் வைடு எனக் காட்ட கையை லேசாகத் தூக்கியதும் பவுலர் உடனே எதிர்ப்பு காட்டினார். தோனி உடனே அடுத்தபடியாக எதிர்ப்புக் காட்ட பாதி கையை வைடுக்கு கொண்டு சென்ற நடுவர் ரெய்ஃபல்  கையை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்.

இதையடுத்தே நடுவரை தன் பணியைச் செய்ய விடாமல் இப்படி கேப்டன்களும், வீரர்களும் செல்வாக்கு செலுத்தி முடிவை மாற்றுவதா என சர்ச்சை கிளம்பியுள்ளது. இது போட்டியின் முடிவை மாற்றியிருக்கும் எனக் கூற முடியாவிட்டாலும் நடுவர் ஒரு உண்மையான தீர்ப்பை அளிக்க முடியாமல் இப்படி அணி கேப்டன்கள், வீரர்கள் செல்வாக்கு செலுத்தலாமா எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தோனியை கிண்டல் செய்து ரசிகர்கள் பலரும் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.  இதுகுறித்த பதிவுகளில் தோனி அம்பயரை மிரட்டினார் எனவும், தோனி இப்படி செய்யலாமா, கிரிக்கெட்டை விட தோனி பெரியவரா எனவும், சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டுமெனவும் சிலர் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்