சிஎஸ்கே அணி விடுவித்த பிறகு.. அடேங்கப்பா லெவலில் சாதனை படைச்ச ஜெகதீசன்.. CSK பகிர்ந்த வைரல் ட்வீட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழக கிரிக்கெட் வீரரான ஜெகதீசன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை படைத்து அசத்தி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "எல்லா ரெக்கார்டும் இனி நம்ம பேருல தான்".. 50 ஓவர் போட்டியில் 200+ ரன்கள்.. தமிழக வீரர் ஜெகதீசனின் அசாத்திய சாதனை!!

விஜய் ஹசாரே தொடர் தற்போது இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணிக்கு பாபா இந்திரஜித் தலைமை தாங்கி வருகிறார். குரூப் சி யில் தமிழ்நாடு அணி இடம்பெற்றுள்ள நிலையில், இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலிலும் முதலிடம் வகிக்கிறது.

தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்திருந்தது. லிஸ்ட் ஏ போட்டியில் ஒரு அணி 500 ரன்களுக்கு மேல் எடுத்தது இது தான் முதல் முறை. இதற்கு முன்பு, நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.

அதே போல தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் சேர்த்தனர். சாய் சுதர்சன் 154 ரன்களும், ஜெகதீசன் 277 ரன்களும் எடுத்தனர். நடப்பு விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் அடித்துள்ள ஜெகதீசன், தொடர்ச்சியாக லிஸ்ட் ஏ போட்டியில் ஐந்து சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். மேலும் அவர் அடித்த 277 ரன்களும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகவும் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், ஜெகதீசன் பேட்டிங் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்துள்ள ட்வீட், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கொச்சியில் வைத்து நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், இந்த மினி ஏலத்திற்கு முன்பாக மொத்தமுள்ள 10 ஐபிஎல் அணிகளும் எந்தெந்த வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள போகிறார்கள் என்பது குறித்தும், எந்த வீரர்களை வெளியேற்ற போகிறார்கள் என்பது குறித்தும் பட்டியலையே வெளியிட்டிருந்தனர்.

இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிராவோ, உத்தப்பா உள்ளிட்ட 8 வீரர்களை வெளியேற்றி இருந்தது. இதில் கடந்த சில சீசன்களாக சென்னை அணியில் இடம்பெற்றிருந்த ஜெகதீசனும் ஒருவர். சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள ஜெகதீசன், விஜய் ஹசாரே தொடரில் பட்டையை கிளப்பி வருகிறார்.

தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் அடித்துள்ளதால் அனைத்து ஐபிஎல் அணிகளும் ஏலத்தில் அவரை குறி வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில், தங்கள் அணியில் இருந்த இளம் வீரர் ஜெகதீசனின் சாதனைகளை பாராட்டி சிஎஸ்கே அணி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருந்த பஞ்ச தந்திரம் போஸ்டர் போல, ஜெகதீசன் புகைப்படத்தை பகிர்ந்து, அவரது ஐந்து விரல்களிலும் ஐந்து சதங்களின் ஸ்கோரை குறிப்பிட்டுள்ளது. "Jaggi’s (Pancha)TONdhiram!  💯 🖐️" என்றும் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளனர். விடுவித்த வீரர்களில் இருந்தும் சில வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்ததால் ஜெகதீசனை மீண்டும் எடுக்க சிஎஸ்கே முனைப்பு காட்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | ஆல் ஏரியாலயும் அய்யா 'கில்லிடா'.. டென்னிஸ் களத்தில் MS தோனி.. வைரல் புகைப்படங்கள்!!

CRICKET, CSK, CSK TWEETS, JAGADEESAN, JAGADEESAN RECORDS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்