தோனின்னா தல.. அப்போ தளபதி யாரு?.. பிரபல வீரருக்கு CSK நிர்வாகம் கொடுத்த பட்டம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | மைனஸ் குளிரில் ஷூட்டிங்.. காஷ்மீர்ல இருந்து சுடச்சுட LEO படத்தின் வைரல் BTS வீடியோ!

உலகக் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடரின் அட்டவணை சில தினங்களுக்கு முன்னர்  வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன.

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணைப்படி, மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி, மே 28 ஆம் தேதியன்று முடிவடைகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள சூழலில், ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் 7 போட்டிகளை தங்களின் ஹோம் கிரவுண்டிலும், மீதமுள்ள 7 போட்டிகளை மற்ற மைதானங்களில் ஆடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தரம்சாலா ஆகிய 12 நகரங்களில் உள்ள மைதானங்களில் ஐபிஎல் 2023 போட்டிகள் நடைபெறுகின்றன. 52 நாட்களில் 12 மைதானங்களில் மொத்தம் 70 லீக்  ஆட்டங்கள் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னை உட்பட பெருநகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வரும் நிலையில், தமது டிவிட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் புதிய ட்வீட்டை பதிவு செய்துள்ளது. "உலகிற்கு அறிவியுங்கள் தளபதி இங்கு தான் உள்ளார் என" ரவீந்திர ஜடேஜா புகைப்படத்தை பகிர்ந்து ட்வீட் செய்துள்ளது. ஏற்கனவே மகேந்திர சிங் தோனியை தல என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அழைத்து வரும் நிலையில், ரவீந்திர ஜடேஜா தளபதி என அழைக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read | உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. சென்னையில் World Cup மேட்ச்! வெளியான மைதானங்கள் விவரம்.. Final எங்கே

CRICKET, CSK, RAVINDRA JADEJA, CSK TWEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்